பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இத்திருவுருவம் உள்ளத்தில் பதியப் பதியப் படிப்படியே அதன் நுட்பங்கள் விளங்கி விளங்கி, விந்துவைக் கடந்து, நாதத்தை உணர்ந்து, அதையுங் கடந்து, அரங்க நாதனை உணரும் பேற்றை உண்டாக்கும்.”

இசை வெள்ளப் பெருமான்

இதே இசை வெள்ளத்திலே தான் மட்டுமின்றி உலகையே மயக்கி வைக்கிறான் கண்ணன்; அவன் நிற்பதோ பன்னை மரத்தின் கீழ் சையிலோ இசை பொழியும் குழல்; சுற்றிலும் பசுக் கூட்டம்; பெண்-குழாம்.

இயற்கைக்குச் சான்று புன்னை மரம். இந்த இயற்கையை உடலாகக் கொண்டுள்ள பராபரன் கண்ணன் அதன் அடியில் நிற்கிறான். இசை வெள்ளம் பிரணவத்தின் எழுச்சி, பசுக் கூட்டம் சாந்தத்துக்கு அறிகுறி. இந்த சாந் தமே, மூர்க்க ஆண்மையை அழிக்கும்; அமைதிப்படுத்தும். இந்த அமைதியைக் காட்டுவதே பெண்கள் குழாம் (கோபியர் கூட்டம்) இந்த சாந்தம் எவ்வாறு வந்தது?

இசைப் பெருமான் கண்ணனின் குழலோசையே எல்லையில்லா சாந்தத்தை ஏற்படுத்தியது; பரப்பியது; நிலைத்தது.

‘கண்ணபிரானின் புன்னைமரக் கோலத்தை நினைத்து வழிபட்டால் சாந்தமும் அமைதியும் விளைந்து தெய்வீகம் கூடும்’ என்று கூறினார் திரு.வி.க.*

குன்றாடும் குமரன்

முருகப் பிரானை-குன்றாடும் குமரனைக் காண்போமா?

  • உள்ளொளி, பக். 157.

3 * 3 x * 5.

75