பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

22. பொதுமைப் புரட்சியும் திரு.வி.க.வும்

திருவி.க.வின் அடிநாள் வாழ்க்கை எதில் தொடங்கியது? சமயப் பணியில் தொடங்கியது. சமயப் பணி என் செய்தது? பல்வேறு சமயங்களையும் ஆராயத் துண்டியது. ஆராய்ச்சி எதில் கொண்டு விட்டது? பொதுமை உணர்ச்சியில் கொண்டுவிட்டது.

பொதுமை அல்லது சமரசம் உலகில் ஏன் பரவ வில்லை? என்று சிந்திக்கத் தொடங்கினர் அவர். ஒன்றும் விளங்கவில்லை. பின்னே சிங்கார வேல் செட்டியாரின் கட்பு ஏற்பட்டது. அக் கூட்டுறவால் என்ன விளக் தது? சிறிது விளக்கம் ஏற்பட்டது. விளக்கத்தில் என்ன கண்டார்? பொதுமையை உலகில் பரப்பி, கிலே பெறுத்த வல்லது கார்ல் மார்க்ஸ் கொள்கையே என்று கண்டார்.

கடலகில் முதலாளி-தொழிலாளி வேற்றுமை உணர்வு, சன்மார்க்கத்தை வளரவிடாது. சன்மார்க்க வளர்ச்சிக்கு, முதலாளி தொழிலாளி வேற்றுமையுணர்வு பொன்றியே தீர்தல் வேண்டும். வேற்றுமையுணர்வு எப்படிப் பொன்றும்? இதற்குப் புரட்சி தேவை.

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்,