பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185

எங்கே திருவள்ளுருக்கு. ஆயிரக்கணக்கான தொழி லாளர் அவரைத் தொடர்ந்தனர். அரிக்கன் விளக்கு களை ஏந்தி வழி காட்டினர் பலர். திரு.வி.கவின் கை பற்றி அழைத்துச் சென்றனர் சிலர். திருவள்ளுர் செங்கல்பட்டு ஜில்லாவில் உள்ளது. சென்னை நகர எல்லை கடந்து இருப்பது.

தடை உத்தரவு சென்னை நகருக்குத்தான். சென்னை ககர எல்லைக்கு அப்பால் சென்று கூட்டம் நடத்தினல் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

எனவே, திருவள்ளுர் எல்லையில் பொதுக் கூட்டம் கடத்தித் தொழிலாளர்க்கு ஊக்கமளித்தார் திரு.வி.க.

இதன் பிறகே திரு.வி.க வீடு காவலில் வைக்கப் பட்டார். வீடு காவலில் இருந்தபோது அவர் தொழி லாளருக்கு ஊக்கமூட்டியதை முன்னரே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

பல நாட்களுக்குப் பின் வீடு காவல் நீங்கியது. அந்தோணிப்பிள்ளை விடுவிக்கப் பெற்றார். திரு.வி.க வின் பொறுப்பும் நீங்கியது.

  • திரு.வி.கவை உதகமண்டலத்துக்கு மந்திரி அழைத் தாரே! தமது விருந்தினராக. அதன் பொருள் என்ன? உதகமண்டலம் அரசாங்க மாளிகையில் திரு.வி.கவைச் சிறை வைப்பது.