பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

இவ்வாறு கடகத பிள்ளைச் சண்டைகள் பல. சண்டை நேரத்தில் தந்தையாரைக் கண்டுவிட்டால் பெரியசாமி அஞ்சுவார்; ஒடி ஒளிந்து கொள்வார்; சின்னச்சாமியோ எவர்க்கும் அஞ்சார்; அடங்கார்: ஓடார்; ஒளியார்.

துள்ளத்தில் ஒரு குளம் இருந்தது. அக்குளத்தில் தான் எல்லாரும் குளிப்பர். விருத்தாசலனுர் அக்குளம் சென்று நீராடுவர். சின்னச்சாமியும் உடன் செல்வர். சின்னச்சாமி கரைமீது இருப்பார். ஒருநாள் விருத்தா சலர்ை நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர், குளத்தில் இறங்கினர்; நீந்தத் தொடங் கினர். அவ்வாறு நீந்துதல் கண்டார் சின்னச்சாமி. தாமும் குளத்தில் இறங்கினர்; கழுத்தளவு நீரில் சென்று விட்டார். நீந்தத் தெரியவில்லை. சிறு குழந்தைக்கு நீச்சல் தெரியுமா?

ஏற்றம் இறைப்போர் இது கண்டனர். பையன், பையன்’ என்று கூவினர். விருத்தாசலனுர் ஓடினர்; குழ்ந்தையை எடுத்து அப்புறம் கொண்டு சென்றார், வீடு சென்றபின் குழந்தையை கன்கு கடிந்தார். அதன் பிறகு சின்னச்சாமி குளக்கரைப் பக்கம் காலடி வைப் பதே இல்லை. மற்றவர் சென்றாலும் இவர் பின்தங்கி விடுவார்.

அறுந்த காற்றாடி ஒன்று காற்றிலே அசைகது அசைந்து பறந்து வந்தது. இளைஞர் கூட்டம் ஒன்று அதைத் துரத்தி வந்தது.

விருத்தாசலனுர் வீட்டுக் கொல்லையில் உள்ள கொன்றைமரம் ஒன்றில் சிக்கியது அக்காற்றாடி, கொன்றை மரத்தின்மீது ஏறினர் சிலர்; கிளைகள்