பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23

முறிந்தன. அது கண்டனர்; மேலே ஏருது திரும் பினர்.

சின்னச்சாமி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்; எல்லாரும் சென்றபின் கொன்றை மரத்தின்மீது ஏறினர். சிறு குழந்தையன்றாே இளம் கிளைகள் முறிய வில்லை; தாங்கின. தாவித் தாவி மேலேமேலே ஏறினர். காற்றாடியைப் பற்றிவிட்டார். அடா! அடா என் றொரு குரல்.

குரல்கேட்டார் சின்னச்சாமி, காற்றாடியை விட்டார்; பிடித்திருந்த கிளையையும் விட்டார்; விழுந்தார் கீழே. ஒரே இரத்தப் பெருக்கு.

முறிந்த கிளைகளில் கூரிய ஒன்று அவர் விலாப் புறத்தில் கிழித்துவிட்டது. பல இடங்களில் காயம். தந்தையார் ஓடிவந்தார்; தூக்கினர்; தோளில் சாய்த்துக் கொண்டார்; வீட்டினுள் சென்றார், ஒரு பாயில் கிடத் தினர். மருத்துவர் ஒருவர் வந்தார். பச்சிலை வைத்துக் கட்டினர்.

ஒரே எரிச்சல். தாங்க முடியவில்லை. சின்னச்சாமி கதறினர்; கண்ணிர் பொழிந்தார்; துடித்தார். மருத்து வரும் பிறரும் கை கால்களைக் கெட்டியாகப் பிடித்தனர்.

காய்ச்சிய பால் சிறிது கொடுத்தார் அவர்தம் அன்னையார். சிறிது சிறிதாக எரிச்சல் தணிந்தது. உறங்கினர். சிறிது உறக்கம். மீண்டும் கண்விழித்தல். அம்மா! அப்பா என்ற கதறல். மீண்டும் உறக்கம் நீண்ட இரவு எப்படியோ சென்றது.

பொழுது விடிந்தது. செய்தி சென்னைக்கு எட்டி யது. பாட்டியாரும் பாட்டருைம் ஓடி வந்தனர் சின்னச்சாமியைக் கண்டனர்; கண்ணிர் விட்டனர்;