பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

34

துடித்தனர். பத்து நாட்களில் குணம அடைந்தார் சின்னச்சாமி,

இந்தப் பத்து நாளும் பாட்டியார் தம் பேரனைக் கண்ணின் மணிபோல் காத்தார். நாள்தோறும் திருஷ்டி கழித்தார்.

பத்து நாள் கழித்து எழுந்தார் சின்னச்சாமி. காயங்களின் வடுக்கள் சிறிது சிறிதாக ஆறின. ஆனல் இடப் பக்கத்துக் கீறல் வடு மட்டும் மறையவில்லை. நிலைத்து கின்றது.

நூம்பல் என்பது ஒரு ஜாகீர் கிராமம. அக் கிராமத்து அமீனு ஒருவர். பெயர் முனுசாமி பிள்ளை. என்பது. அவருடைய அதிகாரம் சுமார் பத்துக் கிராமங் களில் பரவி இருந்தது. அவர் வரக் கண்டால் எல்லாரும் எழுந்து மரியாதை செய்வர். பெண்கள் விட்டின் உள்ளே சென்று விடுவர். குழந்தைகள் விளையாடுதல் கிறுத்தி வீடு புகுவார்கள்.

அமீனு முனிசாமி பிள்ளையும் விருத்தாசல முதலி யாரும் கண்பர்கள்.

ஒரு நாள். அமீனு முனிசாமி பிள்ளையின் வண்டி, துள்ளம் வழியே சென்றது.

வண்டி கண்ட பெரியோர் எழுந்து கின்றனர். பெண்கள் வீட்டினுள் சென்றனர்.

குழந்தைகள் விளையாடுதல் ஒழித்தார்கள்; அமீனு அமீனு என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் ஒடினர்கள்.

சின்னச்சாமி ஒடவில்லை. என் ஒடுகிறீர்கள்? அமீனுவுக்குக் கொம்பா முளைத்திருக்கிறது” என்று கூவினர்.