பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

கலியாணசுந்தரம் வேலைக்குப் போகக் கூடாதா?” என்று பேசவும், ஏசவும் தொடங்கினர் உறவினர். அப்பேச்சு கலியாணசுந்தரனரின் காதைத்துளைத்தது. குடும்பத் தொல்லை அவரைக் குடைந்தது.

என் செய்வார் கலியாண்சுந்தரனுர்? -

கிைராமத்தை விடுத்துத் தந்தையார் ஏன் சென்னைக்கு வந்தார்? பாழும் படிப்பை எனக்கு ஏன் தந்தார்? உழவு கற்றுக் கொடுத்திருக்கலாமே. கிலங்கள் பாழாய் போகின்றனவே. உரிமை போகிறதே’ என்று நினைந்து கினைந்து உருகுவார்.

இங்கிலையில் ஒருநாள், உலககாத முதலியாரின் மாமனர், ஆலப்பாக்கம் சிதம்பரமுதலியார் வந்தார்; கலியாணசுந்தரனுரை அன்புடன் நோக்கினர்.

பின்னி கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய் திருக்கிறேன் வாரும்” என்று அழைத்தார். சரி என்று கூறிக் கலியாணசுந்தரருைம் சென்றார்.

லிம்ஸன் என்பவர் அப்போது பின்னி கம்பெனி யின் பெரிய துரை. அவர் கலியாணசுந்தரனரின் புக்கீப்பிங் சர்டிபிகேட்டைப் பார்த்தார். கிழவர் ஒருவரிடம் கலியாணசுந்தரனுரை ஒப்புவித்தார். கலியாணசுந்தரனர் பெரிய துரை மூலம் வந்தது, கிழவ ருக்குப் பிடிக்கவில்லை. அவர் கலியாணசுந்தரனரிடம் கடந்து கொண்ட முறையே கிழவரின் வெறுப்பைத் தெளியக் காட்டியது. எனவே, கலியாணசுந்தரனர் பின்னி கம்பெனி வேலைக்குப் போகவில்லை. பின்னே ஸ்மித் கம்பெனியில் முயற்சி செய்யப்பட்டது. அங்கே கதிரைவேற்பிள்ளையின் பகைவர் ஒருவர் இருந்தார்.

தி.-4