பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

அவர் போட்ட கத்தரியால் கலியாணசுந்தரனுர்க்கு அவ்வேலை கிடைக்கவில்லை.

இராயப்பேட்டையில் வடிவேல் முதலியார் என்ற ஒருவர் இருந்தார். அவர், ஸ்பென்ஸர் கம்பெனியில் ஓர் இலாக்காவுக்குத் தலைவர்.

‘ஸ்பென்ஸர் கம்பெனியில் காட்லாக் எழுத ஒருவர் தேவை'’ என்று கூறினர் அவர். கலியாணசுந்தரனுரை அழைத்துக் கொண்டு போய் துரையிடம் விட்டார்.

காட்லாக்குகளின் உள்ளுறையை எழுதி, முறைப் படுத்தி வரிசையாக அடுக்கிவைத்துக் கொள்ளும் வேலை கலியாணசுந்தரனுர்க்கு அளிக்கப்பட்டது.

கலியாணசுந்தரனுர் அவ்வேலையை எளிதில் முடித் தார். காட்லாக்கின் பெயர், உள்ளுறை, முதலியன வேலைக்காரனுக்குப் பாடம். எனவே, காட்லாக்குகள் கேட்கப்படும் போது கார்டுகளைப் பார்த்துச் சொல்வதற் குள் வேலைக்காரன் அவைகளை எடுத்து வந்து விடு வான். கலியாண சுந்தரனுர்க்கு வேலை அதிகமில்லை; ஒய்வு அதிகம். ஓய்வு கேரத்தில் புத்தகங்கள் படிப்பார்; பாட்டு எழுதுவார்; கட்டுரைகள் எழுதுவார். கதிரை வேற் பிள்ளை சரித்திரத்தையும் எழுதினுர்.

அந் நாளில் இந்திய அரசியல் வானம் எப்படியிருக் தது? இடித்து முழங்கிக் கொண்டிருந்தது. 1902ம் ஆண்டு, சுரேந்திரகாத் பானர்ஜி என்பவர் இந்திய அரசியல் வானிலே ஒளிவீசிக் கொண்டிருந்தார். அவர்தம் ஆங்கிலப் பேச்சைக் கேட்டோர் ஆயைரின் குழல் கேட்ட ஆவினம் போலாவர். அவர் சென்னை வந்து இடித்து முழங்கியபோது கலியான சுந்தரஞர் அம் முழக்கம் கேட்டார்; உணர்ச்சி பெற்றார்,