பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

8. “தேச பக்த"னும் திரு.வி.கவும்

பத்திரிகை முயற்சி தொடங்கப்பட்டது. பத்திரி கைக்கு என்ன பெயர் வைப்பது? இதுபற்றிப் பலர் பலவாறு கூறினர். பெயர்கள் பல கூறப்பட்டன. இறுதியில் சில பெயர்களைச் சீட்டில் எழுதினர்; குலுக்கி னர். தரையில போட்டனர். சீட்டில் ஏதாவது ஒன்றை எடுக்குமாறு ஒரு சிறுவனைக் கேட்டனர். சிறுவன் ஒரு சீட்டை எடுத்தான். தேச பக்தன்’ என்ற பெயர் காணப் பட்டது. அப்பெயரையே பத்திரிகைக்குச் சூட்டுவது என்று முடிவு செய்தனர். பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடத்தில் அச்சிட்டுத் தேசபக்தனே’ வெளியிடு பவராகப் பதிவு செய்து கொண்டார் திரு. வி. க.

திரு.வி.க.வின் தமையனுர் திரு. வி. உலககாத முதலியாரே பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடத்தின் மேற்பார்வையாளர் ஆனர். திரு.வி. உலககாத முதலி யார் அச்சுக்கூட கிர்வாகத்தில் பயிற்சி பெற்றவர்; அநுபவத்தில் பண்பட்டவர்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஐக்தாந்தேதி, வெஸ்லி கல்லூரி யினின்றும் விலகினர் திரு.வி.க.

திரு. வி. க. கல்லூரி விடுத்த செய்தி கேட்டனர் நண்பர் சிலர்; திரு.வி.க.வின் செயலே மறுத்தனர்