95
95
காங்கிரசுக்குப் பெருவாரி வெற்றி கிடைத்தால் முட்டுக்கட்டை இடுதல் கூடும். பெரும்பான்மை வெற்றி கிட்டாவிடின் என்செய்வது? சுயேச்சைகளுக்கு ஆதரவு கொடுத்து சுயேச்சை மந்திரி சபை அமையச் செய்யும். இவ்வாறு நாம் செய்யாவிட்டால் என் ஆகும்? சுயேச்சைகள் ஜஸ்டிஸ் மடியில் விழக்கூடும். அவ்வாறு வீழ்ந்து ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவுடன் மந்திரிசபை அமைக்கவிடாமல் தடுக்கவே சுயேச்சை களுக்கு ஆதரவு கல்கும் காங்கிரஸ். சுயேச்சை மந்திரி சபை அமையச் செய்யும். அம்மந்திரி சபை கவிழாத வாறு காக்கும். காங்கிரஸ் வட்டாரத்தில் இப்படிப் பேசப்பட்டது உண்மை.’’ என்றார் ஐயங்கார்.
கேட்ட்ார் திரு.வி.க. மனம் உடைந்து போனுர்; வீடு சேர்ந்தார்; சிந்தனையில் ஆழ்ந்தார்.
‘ஒத்துழையா நோக்குடன் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். முட்டுக்கட்டையிட்டு மீண்டும் ஒத்துழை யாமையை உயிர்ப்பிப்பது கமது கடமை. மற்றக் கட்சிகள் மீது காம் ஏன் கருத்துச் செலுத்தவேண்டும்? சுயேச்சைக் கட்சியை முட்டுக் கட்டைக்குப் பயன் படுத்தலாகாதா? ஜஸ்டிஸும் சுயேச்சையும் ஒன்று பட்டு மந்திரி சபை அமைத்தால் கமக்கென்ன? அச் சபையை உடைக்கக் காங்கிரஸ் முயலலாமன்றாே? இல்லையேல் வெளியே வந்து ஆக்க வேலை செய்ய லாமன்றாே உளத்தில் ஒன்று கொண்டு வாயால் வேறு பேசி மக்களை ஏமாற்றுவது அறமாகுமா? காட்டின் கேட்டுக்குக் காரணர் தலைவர்களே’ என்றஎண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி கெஞ்சை உறுத்தின
- திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்