பக்கம்:திரு. வி. க.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. இ. அ.ச. ஞானசம்பந்தன்

அடையாளங்களாலும் தாம் மேற்கொண்ட சமயத்தை உலகத்தார்க்கு அறிவிப்பதுடன், தாம் செய்யும் கிரியை களாலும் சமய வாழ்வு வாழ்வதாக நினைத்து இறுமாந்திருக் கின்றனர். ஆனால், திரு.வி.கவோ எனில், சமயத்தை அங்கி போல் மேற்கொள்ளாமல் அதனைக் குருதியாகக்கொண்டு வாழத் தொடங்கினார். இயற்கையில் இறைவனைக் காணும் இயல்பு பெற்றவராகிய அவர், மக்களுள்ளும் இறைவனைக் கண்டார். மக்கள் தம்முள் எவ்வித வேறுபாட்டையும் காணாமல் அனைவரையும் இறைவனுடைய கோயில் களாகவே போற்றினார். இந்த ஒப்பற்ற பண்பாட்டின் காரணமாகத்தான் அப் பெருந்துறவியார் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை நலம் என்ற ஒப்புயர்வற்ற நூலை எழுத இயன்றது.

இருவகையர்

பெண்ணின்பத்தை மறைந்து நின்று பெற விரும்பும் போலித் துறவிகள், பெண் என்பவள் தன் முன்னேற்றத்தைத் தடை செய்யும் கொடியவள் என்று வாயினால் கூறிப்பறை அறைந்து சென்றனர். ஆனால், உள்ளத் துறவோடு உடல் துறவும் கொண்டு வாழ்ந்த இந்தப் பெரியார் பெண்மின் பெருமைபற்றி எழுதலாயினர். உலகிடை வாழும் பெண் களைச் சோதரியாகவும் தாய்மாராகவும் காண்டல் வேண்டும் என்று வாய்கிழியப் பேசும் பேச்சாளர்கள் நிரம்ப உண்டு. ஆனால், அதனை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய பெருமை திரு. வி. க. அவர்கட்கே உண்டு.

சமரசம் என்றும் சன்மார்க்கம் என்றும் பேசுபவர் கூட இத் தமிழ்நாட்டில் அருமையாகிவிட்டனர். இராமலிங்க வள்ளலாருங்கூடக் கடையை விரித்தோம்; வாங்குவர் ரில்லை என்று மன உளைவுடன் கூறிச் சென்றார். ஆனால், மற்றோர் கோணத்திலிருந்து விஞ்ஞான உலகையும் சமய உலகையுங் கண்ட இப் பேரறிஞர் இவை இரண்டினிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/116&oldid=695402" இலிருந்து மீள்விக்கப்பட்டது