பக்கம்:திரு. வி. க.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 107

முரண்பாடே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன் அடிப்படையில் காணப்பெற்ற இவருடைய சமரச சன்மார்க்கம் இன்னும் வலுப்பெற்று நிற்கக் காண்கிறோம். சமய சம்பந்தமாக அவருடைய வாழ்வின் முற்பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் பெரியார். அவை அனைத்தும் விரிவான முறையில் உரைநடையில் அமைந்துள்ளன.

ஆனால், வாழ்வின் பிற்பகுதியில் இதே கருத்துகளைப் பாடல்களாக வரைந்துள்ளார். பழைய உரைநடையில் காணப்பெறும் மிடுக்கும் நாட்டின் நிலைகண்டு கொதித்தெழும் இயல்பும் பிற்காலத்தே எழுந்த கவிதைகளில் இல்லை. அங்கே பண்பட்டுப் பழுத்த ஒரு சமரச ஞானியின் உளப்பாங்கைப் பார்க்க முடிகின்றது. உலகம் தவறான வழியில் செல்வதைக் கண்டு முற்பகுதியில், அதாவது உரை நடை நூல்கள் எழுதிய காலத்தில் சினந்து சாடும் திரு.வி.க. வைக் காண்கிறோம். ஆனால், பிற்பகுதியில் உலகின் அதே நிலையைக் கண்டு உளம் நொந்து கண்ணிர்விடும் திரு.வி.க. வைக் காண்கிறோம். உலகத்தின் துயர்துடைப்பது சமரச சன்மார்க்கம் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துள்ள திரு.வி.க.வை இறுதிக் காலத்தில் அவர் எழுதிய நூல்களி லிருந்து காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/117&oldid=695403" இலிருந்து மீள்விக்கப்பட்டது