பக்கம்:திரு. வி. க.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

அரசியல்

நாட்டுப் பற்று

மனிதனை மாக்கட் கூட்டத்திலிருந்து பிரித்து மனிதனாக வாழச் செய்து அவ்வாழ்விலேயே அவனை மகாத்மாவாகவும் செய்வது சமரச சன்மார்க்கமாகிய சமய வாழ்க்கை என்பதைத் திரு. வி. க. உறுதியாக நம்பினார். எனவே, அவர் வாழ்வு முழுவதும் சமயம் ஊடுருவி நின்றது. சமயத்திற்கு அடுத்தபடியாக அவரிடம் குடிகொண்டிருந்தது நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்று கூறியவுடன் இக்காலத்தில் சிலர் மிகக் குறுகிய நோக்குடன் தம்முடைய மாவட்டப்பற்று என்ற அளவில் நின்றுவிடுகின்றனர். இத்துணைக் குறுகிய ஒன்றை நாட்டுப் பற்று என்ற சொல்லால் குறிப்பதும் பிழையாகும். இனப்பற்று, சாதிப்பற்று என்பவற்றுடன் வைத்து எண்ணத் தகுந்ததே மாவட்டப் பற்றும். நாட்டுப் பற்று அல்லது தேசபக்தி என்பது, தான் பிறந்து வளர்ந்த ஊர். அது இடம் பெற்றுள்ள மாவட்டம், அம்மாவட்டம், நிலைபெற்றுள்ள மாநிலம். அம்மாநிலம் இருக்கும் தேசம் என்ற விரிந்த முறையில் அமைவதேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/118&oldid=695404" இலிருந்து மீள்விக்கப்பட்டது