பக்கம்:திரு. வி. க.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இ அ.ச. ஞானசம்பந்தன்

அன்றைய நிலைமை

- இன்றைக்கு (1967) எண்பத்து நான்கு ஆண்டுகட்கு முன்னர் இத்தமிழ் மண்ணிடைத் தோன்றினார் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்.

மெட்ரிக்குலேஷன் தேர்வை அடைவதற்கு முன்னரே பொது வாழ்வில் ஈடுபட்டுவிட்டார் திரு. வி.க. எனவே, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மறைமொழியை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார். இப் பெரியாரின் எல்லாத் தொண்டுகளும் தமிழுடன் தொடர்புடையன. தமிழோடு இசை பாடல் மறவாமலேயே எல்லாத் துறைகளிலும் புகுந்தவிடத்தை யெல்லாம் பொன்னாக் கினார். அவ்வாறானால் இவர் தோன்றுவதற்கு முன்னர்த் தமிழ் நாடு எத்தகைய நிலையிலிருந்தது என்பதைக் காண்டல் வேண்டும். தமிழ்நாடும் தமிழ்மொழியும் அன்றிருந்த நிலையை அறிந்துகொண்டால்தான் திரு. வி.க.வின் தொண்டு எத்தகைய தனித்தன்மை வாய்ந்தது என்பதை அறிய முடியும். இரு பெரும் பிரிவுகள்

அன்றைத் தமிழ்நாட்டில் இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தன. ஒன்று தமிழ் மட்டும் அறிந்தோர் கூட்டம்; ஏனையது ஆங்கிலம் மட்டும் அறிந்தோர் கூட்டம். ஆங்கிலம் மட்டும் அறிந்தோர் என்று கூறினவுடன் இவர்கள் பிற நாட்டவரோ என்று நினைத்து விட வேண்டா. இவர்களும் தமிழர்களே. ஆனால் எனக்கு டமில் வராது என்று கூறுவதில் பெருமையடையும் திருக்கூட்டம் இது முதலாவது பிரிவினரை எடுத்துக் கொண்டால், அவருள் ஆயிரம் உட்பிரிவுகள். சாதிப்பிரிவுகள் ஒருபுறம்; சமயத்தாலும் கல்வியாலுமே பிரிவினை எய்தியவர் ஒருபுறம். விவிலிய நூலைத் தமிழாக்கஞ் செய்த ஆறுமுக நாவலர் போன்ற மாபெரும் அறிவாளிகள்கூட, அருட்பா மருட்பாப்போரில் இறங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/14&oldid=695428" இலிருந்து மீள்விக்கப்பட்டது