பக்கம்:திரு. வி. க.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இ அக ஞானசம்பந்தன்

கோலம் தாங்குவதென்னை? உன்னிடத்தில் ஏழு நிறம் அமைவானேன்? என்ற இந்த வினாக்களை எழுப்பிக் கொள் வதன்மூலம் புவியியல், வானியல், பெளதிகவியல் ஆகிய மூன்று துறைகளிலும் மனம் சிந்திக்கத்தக்க சூழ்நிலை ஏற்படுகிறது. ஏதோ ஒரு நூலை மாத்திரம் பிறர் கூறும் முறையில் கேட்டு அமைதியடைகின்ற மணமன்று திரு.வி.க.விற்கு, அவரையொத்த ஓர் அறிஞரை அன்றும் இன்றும் காண்டல் அரிது. இந்த வினாக்களை ஆசிரியர்கள் மூலமே அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைந்திருப்பின் மேலே கூறியாங்கு ஒரு புவி இயலாசிரியர், வானியலாசியர், பெளதிகவியலாசிரியர் ஆகிய மூவரிடம் சென்றிருக்க நேரிடும். இம் மூவரும் தத்தம் கலையறிவே உயர்ந்தது என்ற குருட்டு நம்பிக்கையுடன் தத்தங் கருத்துகளை மட்டும் கூறுவரேயன்றி இம் மூன்றியல்புகளும் கொண்டது ஒரு ஞாயிறுதானே என்பதை மறந்து விடுகின்றனர். தனி மரத்தைப் பெரிதென மதித்துக் காட்டை மறப்பதும், காட்டைப் பெரிதென மதித்துத் தனி மரத்தை மறப்பதும் தவறேயாகும். இவ்விரு வகைப் பிழையையும் செய்யவில்லை திரு.வி.க. இதனால்தான் அவருடைய அறிவும் வளர்ந்தது. மனமும் விரிந்தது.

இத்தகைய இயற்கைக் கல்வியால் தாம் பெற்ற பயனை இதோ பெரியார் குறிக்கிறார்:

“இம் முறையில் இயற்கைக் கல்வி பெருகுகிறது. அக் கல்வி பெருகப் பெருக என்ன தெரிகிறது: இயற்கைக் கூறுகளெல்லாம் ஒன்றன் விரிவு என்பது தெரிகிறது. அதனால் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்னும் பொதுமை விளக்கமுறுகிறது பொதுமைஅறம்-அந்தண்மை-எல்லாம் ஒன்றே. பொதுமை இயற்கை நெறி. இயற்கை நெறியே தமிழ் நெறி. இந்நெறியில் நின்றொழுகும் பேறு ஓரளவிலாதல் யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/176&oldid=695468" இலிருந்து மீள்விக்கப்பட்டது