பக்கம்:திரு. வி. க.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அச. ஞானசம்பந்தன்

விளங்கியதைக் காண்டல் கூடும். உரைநடை இலக்கியம் படைப்பதிலும் திரு. வி.க. அற்றை நாளில் பெருவழக்காக இருந்த முறையை மாற்றியமைத்தார். பிறருக்குப் புரியாத முறையில் பேசுவதும் எழுதுவதுமே சிறந்த தமிழ்நடை என்று கருதிய காலம் அது. பிறர்க்குப் புரியக்கூடாது என்ற கருத்துடன் எழுதியவர்களல்லர் அக்காலத் தமிழறிஞர்கள். அவர்கள் எண்ணத்தின்படி, கடினமான சொற்களைப் பயன் படுத்துவதே சிறந்த தமிழ்நடை என்பதாம். உதாரணமாக மிகச் சிறந்த அறிஞராகிய வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) கைக்கொண்ட நடையை யும், மறைமலையடிகளார் கைக்கொண்ட நடையையும் கூறலாம். இத்தகைய நடையை அப்பெரியார்கள் மேற் கொள்வதற்கு வட மொழிக் கலப்பை நீக்கித் தூய தமிழில் எழுத வேண்டும் என்பதும் ஒரு காரணமாகும். அவ்வாறு துய தமிழில் எழுதும்பொழுதும் எளிய சொற்களை விட்டுக் கடினமான சொற்களையே பயன்படுத்தினர். அவர்கள், எளிய சொற்கள் பல்லோராலும் பயன்படுத்தப் பெற்றமை யின் சிறந்த கருத்துகளை வெளியிட அவை பயன்பட மாட்டா என்று கருதினர் போலும்.

இதன் எதிராக மற்றொரு கூட்டமும் இயங்கி வந்தது. முன்சிப் வேதநாயகம் பிள்ளை, மாதவையா போன்றவர்கள் இக் கூட்டத்தின் முன்னோடிகள் எனலாம். இவர்கள் நடை மிக எளிமையானதாய் யாவரும் கற்றுப் பயனடையக் கூடியதாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள் நடையில் வடசொற்கள் அளவு மீறிக் கலந்திருந்தன என்பதையும் மறுத்தல் இயலாது. இதுபற்றிப் பின்னர்ச் சற்று விரிவாகக் காணலாம்.

தமக்கென ஒரு தனி வழி

இந்த இருவகைத் தமிழ்நடையும் உலவிவந்த நாளில் திரு. வி.க. அவர்கள் இவை இரண்டிலும் காணப்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/18&oldid=695472" இலிருந்து மீள்விக்கப்பட்டது