பக்கம்:திரு. வி. க.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 219

இறைவனின் மூன்று நிலை

வழிபாட்டுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய வாசகங்கடந்த நிலை முதலாக மூன்று நிலைகளை ஆதிபகவன் என்ற சொற்றொடரில் காண்கிறார் அறிஞர்:

(அ) ஆதிபகவன் தனக்கோர் அதிகாரியின்றி எல்லாவற்றிற்கும் தானே ஆதியாய் நிற்கும் நிலை யொன்று. இது வாக்கு மனங் கடந்தது. வழிபாட்டுக் குரியதன்று.

(ஆ) ஆதியும் பகவனும் ஞாயிறாகப் பொரு ளுணர்த்துங்கால், அஃது ஆதிபகவன் இயற்கை வடிவினன் என்பதைக் குறிப்பதாகும். இந்நிலை வழி பாட்டிற்குரியது. . -

(இ) ஆதிபகவன் ஞானகுரு என்னும் பொருளில் நிற்கும்போது, அவனது குருநிலை விளங்குவதாகிறது. தக்க முறையில், காரண காரியத் தொடர்புடன் ஆதிபகவன் என்ற தொடருக்கு இம்மூன்று பொருளும் கொள்ளலாம் என்று விரிவாக எழுதிவிட்டு, இறுதியில் இவ்வாறு சாரத்தை எடுத்துச் சுருக்கி வழங்குகின்ற நேரத்தில் திரு.வி.க. பரிமேலழகராகிறார். எல்லாம் என்பது பற்றி -

இனி எழுத்து எல்லாம் என்ற சொல்லின் சிறப்பைக் கூறப் புகுந்து, . .

“ எல்லாம் என்பது பெய்யப்பட்டிருத்தல் வெறுஞ் செய்யுளோசை நிரப்பலுக்கு மட்டுமன்று. எழுத்தெனக் கூறின், தாம் தமிழில் நூல் யாக்கப் போந்தமையான், மக்கள் எழுத்து’ என்பதைத் தமிழெழுத்தென்று கொள்ளுதற்கு இடமுண்டாகு மென்று கருதி, அதைத் தகையவும், உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களையெல்லாங் குறிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/229&oldid=695526" இலிருந்து மீள்விக்கப்பட்டது