பக்கம்:திரு. வி. க.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 55

மார்க்ஸ். உலகப் போராட்டத்துக்கு மூலமாக நிற்பது முதலாளி-தொழிலாளி என்னும் வேற்றுமை உணர் வென்பது மார்க்ஸ் கண்ட உண்மை. இது நடுநிலையில் நின்று போர் மூலத்தை ஆராயும் ஒவ்வோர் அறிஞர்க்கும் எளிதில் புலனாகும்.

பண்டை நாளில் சாம்ராஜ்யங்கள் பெருக வில்லை, அதனால் முதலாளி-தொழிலாளி வேற்றுமை உணர்வு வளராமற் கிடந்தது. இந்நாளில் சாம்ராஜ் யங்கள் பெருகியுள்ளன. அப் பெருக்கம் முதலாளிதொழிலாளி வேற்றுமை உணர்வை வளர்ப்பதாயிற்று. அவ்வளர்ச்சி வாழ்க்கையில் போராட்டத்தைப் புகுத்தியது. போராட்டத்தை ஒழிக்கும் மருந்து காரல் மார்க்ஸுக்குக் கிடைத்தது. அது, பொதுமை அறத்தை நிலைபெறுத்தவல்ல பொருளாதார சமரசம்.

மார்க்ஸ் கண்ட பொருட் பொதுமை உலகில் புற அமைதியை நிலவச் செய்யும் மாண்புடையது. அவ் அமைதியை மகம்மது, கிறிஸ்து, அருகர், புத்தர், கண்ணபிரான், குமரன், தட்சிணாமூர்த்தி முதலியோர் கொள்கை நிலைபெறச் செய்யும். அக அமைதிக்குப் புற அமைதி வேண்டற்பாலது. புற அமைதியை உலகில் நிலவச் செய்யும் வல்லமை வாய்ந்த மார்க்ஸியத்தை நாத்திகம் என்று எப்படித் தள்ளுவது: மார்க்ஸி யத்தைத் தள்ளுவது சான்றோரின் அமைதிச் செல்வத்தைத் தள்ளுவதாகும்; போராட்டத்தை அழைப்பதாகும். - -

சான்றோர் அருளிய பொதுமை அறத்துக்கு ஆக்கந் தேடவே யான் மார்க்ஸின் பொருட் பொதுமைக் கொள்கையைத் தழுவுகிறேன். மார்க்ளி யத்தைச் சான்றோரின் மூலக் கொள்கைக்கு மாறாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/65&oldid=695584" இலிருந்து மீள்விக்கப்பட்டது