பக்கம்:திரு. வி. க.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆ அச. ஞானசம்பந்தன்

அவற்றின் கலப்பும் பல சமயத்தார் கருத்துகளுக்குப் பெரிதும் அரண் செய்தல் காண்க.

எல்லார்க்கும் பொதுவாக உள்ள வேதாந்த உண்மை இஃதென ஒவ்வோர் அறிஞர் கூறியவாறு மெய்கண்டாரும் தாங்கண்ட வேதாந்த உண்மையை உலகிற்கு அறிவுறுத்தினார். அவ்வுண்மை சித்தாந்தம். சுத்தாத்துவிதம் முதலிய பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

ஏகான்ம வாதமே வேதாந்தமெனக் கூறு வோர்க்கும், இச்சித்தாந்தக் கொள்கையுடையவர்க்கும் என்றும் போர் நிகழ்ந்துவருவதை யான் அறிவேன். வேதாந்தமென்பது ஒரு கூட்டத்தார் உடைமையன்று. வேதாந்தம் என் பொருள்’ ‘என் பொருள் என்று போரிடுவோர்க்கு அஃதொன்றும் பொருளாதல் அரிது: அரிது. என்னை: வேதாந்தம் வாதப் போர் களைக் கடந்தொளிர்வதாகலின் என்க. வேதாந்த மாதல் சித்தாந்தமாதல் போரிடுமாறு பாண்டுக் கூறுகிறது? உண்மையைக் குறிக்கொண்டு ஆராய் வோர்க்கு வேதாந்த சித்தாந்த வேற்றுமை தோன்றவே தோன்றாது.”

கந்தழி

சைவ சித்தாந்திகள் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் இதனை நன்கு ஆராயவேண்டும். மிகப் பழைய காலத்தில் ‘கந்தழி என்று கடவுட்குப் பெயரிட்டனர். கந்து-கட்டு; அழி-அற்றவிடம். முழுமுதற் பொருள் கட்டற்றது என்ற பேருண்மையை அறிந்த நம்மவர் அதனைச் சிவம் என்று பெயரிட்டு வழிபட்டுவந்தனர். இவ்வாறு கூறுவதால் சைவ

சைவத்தின் சமரசம், பக்கம், 55-57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/90&oldid=695612" இலிருந்து மீள்விக்கப்பட்டது