பக்கம்:திரு அம்மானை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திரு அம்மானே களுக்காகக் காத்திருக்கிறேன்' என்று அறைகூவுகிருன், அன்னதானம் செய்கிறவர்கள் முரசடித்துப் பசியுடைய வர்களே அழைப்பது போலே அவன் அறைகூவுகிருன், என்ன முரசடித்தாலும் செவிடர்கள் காதில் விழாது. இறைவனிடம் அன்பில்லாதவர்களுக்கு அவன் அறை கூவுவது தெரியாது. - இவ்வாறு அறை கூவித் தன்பால் வந்த பேரன்பர் களுக்கு அவன்.வீட்டைத் தந்தருளுகிருன் கால மெல்லாம் அலேந்து, இறைவன் திருவருள் கிடைக்குமோ என்று ஏங்கி, அலமந்து வாழும் அன்பர்களுக்கு அவன் அன்ற கூவல் கேட்கிறது. தன்னே விட்டுப் பிரிந்த அன்னையைத் தேடும் குழந்தை நாடித் தேடி, அவள் அழைக்கும் குரலே இனமறிந்து கொண்டு ஒடிச் செல்வதைப் போலே, அடி யார்கள் வ்ருகிருர்கள். "இனி நீங்கள் தேடி அலேய வேண்டாம்; சுகமாக இந்த வீட்டில் இருந்து வாழுங்கள்' என்று அவர்கள் என்றும் இன்புற்று வாழும் வீட்டைத் தந்தருள்கிருன். . . . . - " ஒருபூ தரும்அறியாத்தனி வீட்டில் உரைஉணர்வற்று - இருபூத வீட்டில் இராமல்என்ருன்” என்று அருணகிரிநாதர் பாடுகிருர், - அருட் பெருக்கால் இறைவன் அந்தணகை இங்கே எழுந்தருளி வந்து, அன்பர்களே வாருங்கள் என்று கூவி அழைத்து வீட்டை அருள் கிருன். இந்தக் கருணையை எவ்வாறு அளவிடுவது அவன் தன் திருவடியையே வீடாகக் காட்டுகிருன். அது உயிர்க் கூட்டங்களுக்குத் துன்பம் தரும் பகையாகிய பாசத்தை அறுத்து வெற்றி நடைபோடுவது. அதற்கு அடையாளமாகக் கழலே அணிக் திருக்கிறது. அந்தத் திருவடிதானே இங்கே எழுந்தருளி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/20&oldid=894858" இலிருந்து மீள்விக்கப்பட்டது