பக்கம்:திரு அம்மானை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கருணை வார்கழல் - 7 கலம் செய்கிறது? அதன் கருண மீண்டது. அது வார்கழல். - r - அந்தக் கழலணிந்த அடியைப் பாடுவோம்; அம்மானே ஆடுவோம்' என்று மகளிரோடு சேர்ந்து பாடுகிருர் மணிவாசகப் பெருமான். - - செங்கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பரிய பொங்கும் மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பு:அறுத்திட்டு, எம்தரமும் ஆட்கொண்டு. தெங்கு திரளசோலேத் தென்னன், பெருந்துறையான், அங்கனன்; அந்தணய்ை அறைகூவி வீடருளும் அம்கருணை வார்கழலே பாடுதுங்காண், அம்மாளுய்! * அம்மானை ஆடும் பெண்ணே, தென்னமரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளேயுடைய தென்னட்டில் உள்ள சிவபெருமான், திருப்பெருங் துறையில் கித்திய வாசம் செய்பவன், சிவப்பையுடைய கண்ணேப் பெற்ற நெடிய திருமாலும் சென்று கிலத்தைத் தோண்டிப் பார்த்தும் காண்பதற்கரியதும், அருள் பொங்குவது மாகிய தாமரை மலரைப் போன்ற திருவடி பூமியில் பட கடந்து வந்து அருளி, எங்கள் பிறப்பை அறுத்துவிட்டு, எம்முடைய தாழ்ந்த தகுதிக்கும் உரியவகை வந்து எங்களே அடிமையாகக் கொண்டு, அழகிய கண்ணே உடையவன கவும், அந்தணகைவும் கோலம் காட்டி, வலிய அழைத்து எங்களுக்கு வீட்டை அருள் செய்கின்ற அழகிய கருணையை உடைய நீண்ட அந்தத் திருவடிகளை நாம் பாடுவோம். (காண்பதற்கு ஏற்ற தகுதியுடைய செங்கண்ண்ே உடையவகை இருந்தும் அவல்ை தெரிந்து கொள்ள முடிய வில்லை. கண் இருந்தும், காணவேண்டும் என்ற அன்புத் துடிப்புள்ள கருத்து இன்மையால் காணமுடியவில்லை. கின்றவாறே எல்லாவற்றையும் கணிசிக்கும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/21&oldid=894860" இலிருந்து மீள்விக்கப்பட்டது