பக்கம்:திரு அம்மானை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கருணை வார்கழல் 9 அடை ஒன்றும் வேண்டியதில்லை. கண்ணுக்கு அழகு அருள்; "கண்ணுக் கணிகலம் கண்ைேட்டம்" (திருக் குறள்). அறை கூவி எங்கோ செல்லும் எங்கள் காதிலும் விழும்படி உரக்கக் கூவி, வீடிருக்கும் இடம் தேடி அலையும் வருத்தமின்றி, எளிதில் அடையும்படி தானே அழைத்து அருளும் பெருங்கருணையாளன் இறைவன். * அம்கமுல், கருணைக் கழல், வார்கழல் என்று சிறப்புக் களைக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். காண்பதற்கு அழகியதாகவும், அணுகினல் கருணையை வழங்குவதாகவும், அன்பருள்ள இடத்தே சென்று நலம் செய்வதாகவும் இருப் பதால், அங்கருணை வார்கழல் என்ருர் 1 திருவாசகத்தில் திரு அம்மானை என்ற பதிகத்தில் உள்ள முதற்பாடடு இது. - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/23&oldid=894864" இலிருந்து மீள்விக்கப்பட்டது