பக்கம்:திரு அம்மானை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பித்துப் பிடிக்கச் செய்தவன் இறைவன் தமக்கு அருள் புரிந்த செயல் எண்ணி எண்ணி விம்மிதமுற்று உருகுபவர் மாணிக்கவாசகர். தகுதியுள்ள அன்பர்கள் பலர் இருக்கவும் சிறிதேனும் தகுதி யில்லாத கம்மை அவன் ஆட் கொண்டான் என்று அடிக்கடி சொல்வார். பெரியவர்கள் இப்படித்தான் கினைப்பார்கள். சிறியவர்களோ தாம் பெறவேண்டியதைப் பெறவில்லையே என்று ஏங்குவார்கள். தாம் ஏதோ பெரிய பக்தி உடைய வர்களைப் போலவும், அரிய சாதனைகளைச் சாதித்து விட்ட வர்களேப் போலவும் இறுமாந்து, தம் தகுதிக்கு ஏற்ற பதவி கிடைக்கவில்லையே, மதிப்பை உலகத்தார் தரவில்லையே என்று எண்ணி எண்ணி மனம் குலைவார்கள். தாம் செய்தது சிறிதென்றும் பெற்றது. பெரிதென்றும் உத்தம அடியார்கள் எண்ணியிருக்க, தாம் செய்த அளவுக்குத் தமக்கு இறைவன் தக்கபடி பலன் கொடுக்க வில்லை என்று பூரியர் கினைப்பார்கள். பூரியர்கள் அவ்வாறு எண்ணுவது அகந்தையின் விளைவு. அகங்கார மமகாரங்களே அடியோடு விட்டொழித்த அன்பர்கள் தாம் பெற்ற சிறிய கலனேயும் பெரிதாக எண்ணி, இறைவன் பெருங்கருணை கொண்டு தமக்கு நன்மை செய்தான் என்று உருகுவார்கள். இந்த இயல்பின் தலைநிலத்தில் இருப்பவர் மணிவாசகர். காம் எல்லாம் அவரை, "அறிவாற் சிவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/24&oldid=894866" இலிருந்து மீள்விக்கப்பட்டது