பக்கம்:திரு அம்மானை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்துப் பிடிக்கச் செய்தவன் 直置 என்பது திண்ணம்" என்று பார்ாட்ட அவரோ தம்மை, 'காயினும் கடையேன்","புழுத்தலப் புலையனேன்' என்று. சொல்லிக் கொள்கிருர், இறைவன் திருவருள் கிடைத்தற்கு எத்தனே அருவி' என்பதை அவர் நன்கு உணர்ந்தவர். அவனுடைய திருவருளைப் பெறுவதற்காக ஏங்கித் தவித்து சிற்பவர் பலர் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருக்தி கொண்டே இருக்கும். வாசலில் ஆயிரம் பிச்சைக்காரர்கள் காத்து கிற்கவும் ஓர் அன்னதாதா கடைக் கோடியில் கிற்கும் ஒருவனே அழைத்துச் சென்று உணவு அருத்தினுல் அவனுக்கு எத்தகைய உணர்ச்சியிருக்குமோ அத்தகைய உணர்ச்சியை உடையவர் மணிவாசகப்பெருமான். இறைவன் தமக்கு எளியனுக இருக்கும் தன்மையை எண்ணுகிருர். அதன் பெருமையை நன்கு உணர அவர் ஒப்பு நோக்கிப் பார்க்கிரு.ர். எத்தனே பேருக்கு அவன் அரியவகை இருக்கிருன் ஒருவரா, இருவரா? பெரும்: பான்மையோர். அவன் அருள்ப் பெருமல் இருக்கிருர்கள். அவன் அருளென்னும் தண்ணீர் பாயாத பால நிலமாகவே உலகம் முழுவதும் காட்சி அளிக்கிறது. அதனிடையே காம் மட்டும் பசுஞ்சோலையாகத் திகழ்வது போல கினேக்கிரு.ர். அதல்ை அவர் அகங்காரம் கொள்ளவில்லை; இறை வனுடைய கருணை மிகுதியையே எண்ண அந்த ஒப்பு. நோக்குப் பயன்படுகிறது. - . . - இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் இறைவன் காணுவதற்கு அரியவகை இருக்கிருன். உலகில் தோன்றிய மணிவாசகர் தம்முடன் உலக வாழ்வில் உள்ள யாவரையும் பார்க்கிரும். பாரோரால் காண்டற்கு அரியாகை இருக்கிருன் இறைவன் என்பதை உணர்கிருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/25&oldid=894868" இலிருந்து மீள்விக்கப்பட்டது