பக்கம்:திரு அம்மானை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 திரு அம்மானை பாரார்.ஆராலும் காண்டற்கு அரியான். இனி, தேவர்களாவது அவனைக் கண்டு மகிழ் கிருர்களா? நம்மைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர் களாயிற்றே! போகம் கிறைந்த அவர்களுக்குத் தம் பதவிக்குமேலே ஒன்று இருக்கிறதே என்று தெரிவதில்லை. அவர்கள் இறுமாப்புடன் இருக்கிரு.ர்கள். அவர்கள் இந்தப் பூவுலகத்தில் உள்ளவர்களைப் பார்த்து, காம் உயர்ந்த நிலையில் இருக்கிருேம் ' என்ற செருக்குடன் இருக் கிருர்கள். அதல்ை அவர்களாலும் கானுவ கற்கு அரியவகை இருக்கிருன் இறைவன். வானத்தில் சந்திரன் ஒளிரும் போது கூனிக் குறுகித் தரையைப் பார்க்கிற வனுக்குச் சந்திரன் தெரிவான? - r விசும்புள்ளார்., ஆராலும் காண்டற்கு அரியான். உலகங்களே மூன்று வகையாகப் பிரித்துச் சொல் வார்கள். அந்தர் மத்திய பாதலம் என்பவை திரிபுவனங்கள். இவற்றை, "முப்புணர் அடுக்கு" என்று தமிழில் சொல் வாாகள். வானில் உள்ளவர்கள் காண்பதற்கு அரியவனகிய ஆண்டவனப் பாதாளத்தில் உள்ள காகர் முதலியவர்கள் காண்பதுண்டா எனின், அவர்களும் காண்டற்கு அரியவன் அவன், # X பாதாளத்தார் * * 4 ஆாலும் காண்டற்கு அரியான். புவனங்கள் எத்தனையோ உண்டு. தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் ஆகியவற்றுக்கு அப்பாலே கணக்கில்லாத புவனங்கள் இருக்கின்றன. சதுர்த்தச புவனங்கள் என்பது ஒரு கணக்கு. இவற்றையன்றி வேறு வேறு புவனங்களும் பல உண்டு. அந்தப் புவனங்களில் வித்தியேசுவரர் முதலியவர்கள் இருக்கிருர்கள். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/26&oldid=894870" இலிருந்து மீள்விக்கப்பட்டது