பக்கம்:திரு அம்மானை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்துப் பிடிக்கச் செய்தவன் 1霹” களாவது அவனைக் கண்டார்களா எனின் அவர்களும் காண்டற்கு அரியவனாக அவன் இருக்கிருன். புறத்தார் ஆராலும் காண்டற்கு அரியான். இத்தகைய அருமைப்பாடுடையவன், யாருமே: காண்ட்ற்கு அரியவகை இருப்பான ல்ை, இறைவன் என்றஒருவன் இருக்கிரு ைஎன்ற ஐயமே நமக்கு உண்டாகி விடும். யாருமே காணமுடியாத, உணர முடியாத, ஒரு பொருள் இருக்கிறதென்பதற்கு என்ன சாட்சி? ஆகாசக் தாமரை யாரும் கண்டதில்லை. அப்படி ஒன்று இல்லாத தல்ை யாரும் காண்பதில்லை. அவ்வண்ணமே ஆராலும் காண்பதற்கரியவகை இறைவன் இருக்கிருன் என்ருல், அவன் வெறும் கற்பனைப் பொருள் என்றே நினைக்கத் தோன்றும். - - அவன் அப்படி இல்லை. அவனைச் சிலர் காண்கிறர்கள். இராமகிருஷ்ண பரமஹம்ஸர், "கடவுளைக் கண்டீரா?” என்று கேட்ட நரேந்திரருக்கு “குழந்தாய்; நான் கண்டேன்; உனக்கும் காட்டுவேன்' என்று உறுதி அளித்தார். அடியவர்கள் அவனேக் காண்பார்கள். மற்றவர் களுக்கெல்லாம் அரியவகை இருக்கும் அவன் உண்மை யான அன்பர்களுக்குக் சாண்பதற்கு எளியவகை இருக்கிருன். 'கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்' என்று அப்பர் முழங்குவது போல அடியார்களே முழங்கச் செய்கிறவன் இறைவன். அப்படிச் சிலருக்கு எளியவகை இருப்பதல்ை அவனுடைய பெருமை சுருங்குவதில்லை. நாட்டில் பலரும்: அறியும் ஒருவரைப் பெரியவர் என்றும், தலைவர் என்றும் சொல்கிருேம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான மக்களுக்குத் தெரிந்தவராக இருக்கிருரோ அவ்வளவுக்கு, அவ்வளவு அவர் பெரிய தலைவர் என்று போற்றப்படுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/27&oldid=894872" இலிருந்து மீள்விக்கப்பட்டது