பக்கம்:திரு அம்மானை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

避丝 திரு அம்மானே இறைவன் பெரும்பான்மையானவர்கள் காண்பதற்கு அரியவன். மிகச் சிலரே அவனைக் காண்கிருர்கள். என்ருல் அவன் எப்படிப் பெருமையை உடையவன் ஆவான்? இதைச் சற்றே சிந்திக்கவேண்டும். ... - உலகத்தில் உள்ள மலைகள் எல்லாவற்றிலும் உயர்ந்தது இமயமலை. அதன் உச்சியில் பல சிகரங்கள் உள்ளன. எவரெஸ்ட் என்ற சிகரம் எல்லாவற்றையும்விட உயர்ந்தது. அது மிக்க பெருமை பெற்றது. அதை எத்தனே பேர் போய்ப் பார்த்திருக்கிருர்கள்? மிக மிகச் சிலரே அதனைப் பார்த்தவர்கள் பல பேருக்குத் தெரியாமையில்ை அதன் பெருமை குன்றிவிட்டதா? அது பெருமையில் கிமிர்ந்து நிற்கிறது. இறைவனும் அத்தகையவனே. பலரும் காணற்கு அரியவகை இருப்பதனால் அவன் பெருமை .மிகுகிறதேயொழியக் குறைவதில்லை. ஆராலும் காண்டற்கு அரியான்; எமக்கு எளிய பேராளன், அவனுடைய விலாசம் என்ன? அவன் தென்னட்டைத் தன்னுடைய சொந்த நாடாகக் கொண்டிருக்கிருன். எல்லா உலகங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் அவன் இறைவகை இருந்தாலும், அடிக்கடி தொண்டர்கள் வந்து காணும்படி தென்னுட்டில் இருக்கிருன். • - "தென்ன டுடைய சிவனே போற்றி! - எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!” என்று மணிவாசகரே போற்றியிருக்கிருர் அல்லவா? -- அந்த நாட்டில் அவன் இராசதானியாக இருக்கிறது திருப்பெருந்துறை. இதை முன்பாட்டிலும் சொன்னர். பேராளன், தென்னன், பெருந்துறையான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/28&oldid=894874" இலிருந்து மீள்விக்கப்பட்டது