பக்கம்:திரு அம்மானை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்துப் பிடிக்கச் செய்தவன் 重5 அவன் மணிவாசகரை ஆட்கொண்டான். அவர் அமைச்சராக இருந்தவர். பெரிய பதவியை உடைய அரசைேடு பழகியவர். உலகப்பொருள்களினூடே வாழ்ந்து வந்தவர். அவரை ஆண்டவன் ஆட்கொண்டான். இப்போது அவருக்கு வேறு எந்தப் பொருளிலும் நாட்டம் இல்லை. எப்போதும் சிவனே, சிவனே என்று ஒலயிடுகிருர். எதைக் கண்டாலும் சிவபெருமானுடைய நினைவே எழுகிறது. உணவிலும், உடையிலும், நீரிலும், பாரிலும் அவருக்குச் சிவபெருமானே காட்சியளிக்கிருன். எதைக் கண்டாலும் சிவமயமாக இருக்கிறது. அவருக்குச் சிவப்பித்துத் தலைக்கு ஏறிவிட்டது. ஊராரெல்லாம் அவரைக் கண்டு கைக்கிருர் கள். பைத்தியம் பிடித்தவர்களைக் கண்டு உலகம் கைப்பது இயல்புதானே? . . --> - "நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' என்று வேருே.ரிடத்தில் அவர் பாடுகிருர். அவர் போகும் போது, “அதோ பைத்தியம் போகிறது' என்று ஊரவர் எண்ணி நகைக்கிருர்கள். அவர்கள் கூறும் இழிப்புரையை அவர் சட்டை செய்வதில்லை. அவர்கள் பழிக்கப் பழிக்க அவருடைய பித்து அதிகமாகிறது. அவர்கள் கூறும் பழிப்பையெல்லாம் தம்முடைய அணிகலகை ஏற்றுக் கொள்கிரு.ர். $ - * "நாடவர் பழித்துரை பூணதுவாக' - என்று அவரே சொல்கிருர். பிறர் பழித்து ஒதுக்கும் கங்தைகளையும் ஒட்டை உடைசல்களையும் சேர்த்து அணியும் பைத்தியக்காரரைப் போல அவர் இருக்கிரு.ர். - இத்தகைய பித்தை இறைவனே அவரிடம் உண்டாகப் பண்ணினான்; அவரைப் பித்தராக அடித்துவிட்டான்; பைத்தியத்தன்மையை அவரிடம் ஏற்றிவிட்டான்; டாக்டர் இஞ்செக்ஷன் போடுவதைப் போல ஏற்றிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/29&oldid=894876" இலிருந்து மீள்விக்கப்பட்டது