பக்கம்:திரு அம்மானை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திரு அம்மானே' தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி. (பிச்சு-பித்து.1 உலகத்தில் பிக் துப் பிடித்தவர்களுக்கு ஊரவர் பழி மட்டுமா உண்டாகிறது? அவர்களுக்க எத்தகைய இன்பமும் கிட்டுவதில்லை. அவர்கள் அவப்பித்துப் பிடித்த வர்கள். அடியவர்களோ சிவப்பித்துப் பிடித்தவர்கள். உலகத்தவர்போல் நடவாமையிலுைம், பழியைக் கருதா மையிலுைம், ஒன்றையே சொல்லிக் கொண்டிருப் பதலுைம் அவர்கள் பித்கராக இருக்கி கள. ஆல்ை. இந்தப் பித்தினுல் அவர்களுக்குப் பெறற்கரிய பேறு கிடைக்கிறது. பெரும்பித்தனப் பற்றிக் கொண்ட பித்தர் கள் அவர்கள். - தமக்குப் பிக்கை ஏற்றிய கல்ை விளக்க நன்மையைச் சொல்கிருர் மணிவாசகர். இந்த உலகில் மிக்க அறிவு படைத்து, தெளிவான நிலையில் இருப்பதாகத் தம்மை. நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் இறந்தும் பிறந்தும் திரிந்து கொண்டே இருக்கிருர்கள். ஆனல் சிவப் பித்தேறியவர்கள் இனி இந்த உலகத்தில் வந்து பிறக்க மாட்டார்கள். அந்தப் பித்தர்களுக்கு மீட்டு இங்கு வந்து வினேப்பிறவி சாராத நிலையை இறைவன் அருள்வான். பித்தை ஏற்றுகிறவனும் அவனே; அதன் பயனக வாரா வழியை அருள்பவனும் அவன்தான். பிச்சேற்றி, வாரா வழிஅருளி. இனிமேல் இந்த உலகத்தில் பிறவாத பேறு அவர் களுக்குக் கிடைக்கிறது. இது எதிர்காலத்தில் உண்டாகப் போகும் பயன். இப்போது என்ன கிடைக்கிறது? இறைவனே எழுந்தருளி வந்து அவர்களுடைய உள்ளத்தில் குடிபுகுகிருன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/30&oldid=894879" இலிருந்து மீள்விக்கப்பட்டது