பக்கம்:திரு அம்மானை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்துப் பிடிக்கச் செய்தவன் 17 வாரா வழிஅருளி, வந்து என் உளம்புகுந்த, ベ அவன். உளம் புகுந்ததல்ை அவர்களுக்கு இப்போதே இணையில்லாத இன்பம் கிடைத்து விடுகிறது. அமுதத்தை உண்டாரைப் போலப் பேரானந்தப் பெருவாழ்வில் இருக் கிருர்கள். அவன் அமுதாய் இருக்கிருன்; உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதமாக அவன் இருக்கிருன். ஆரா அமுதாய். ஆர்தல்-நிறைவு பெற்றுத் தெவிட்டுதல்; இதோடு போதும் என்ற உணர்வை உண்டாக்குதல். ஆரா.அந்த உணர்ச்சியை உண்டாக்காமல் ஒருகாலேக் கொருகால் இனிமை தந்து, தெவிட்டாமல் உள்ள. - இறைவனுக்கு அன்பர்களிடம் பெருங்காதல் இருக் கிறது. அன்பர்கள் அவனிடம் வைக்கும் அன்பைக் காட்டிலும் அவர்களிடம் அவனுக்கு உள்ள அன்பு மிகமிகப் பெரிது.

  • தீர்ந்த அன் பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி’’ என்று மணிவாசகரே பாடுவார். அன்பர்கள், எங்கே இருக்கிருர்கள் என்று அவன் தேடுகிருன். அலை நிரம்பிய கடலில் வலைபோட்டு மீனைப் பிடிப்பவனைப் போல அவன் இருக்கிருன். பிரபஞ்ச மென்னும் விரிந்த இடத்தில் அன் பர்கள் சிலபேர்தாம் இருப்பார்கள். இறைவன் தன் அருள் வலையை வீசி அந்த மீன்களைப் பிடிக்க வருகிரும்ை. அந்த மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு அதிகமாக இருக்கிறது. தலையில் பெருஞ்சுமையைச் சுமப்ப வன், யாரேனும் அதை வாங்கிக் கொள்ளமாட்டார்களா என்று ஏங்கியிருப்பது போல, அவன் அருளைச் சுமந்து கொண்டு கிற்கிருன்; அதை வாங்கிக் கொள்வார்களைத்

2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/31&oldid=894881" இலிருந்து மீள்விக்கப்பட்டது