பக்கம்:திரு அம்மானை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திரு அம்மானே தேடி அலேகிருன். அன்பர்களுக்கு அருளே வழங்க வேண்டும் என்று அவனுக்கு உள்ள விருப்பம் சாமானியம் அன்று; அது பேராசை; அது கடல் போல விரிந்தது; அவன் பேராசையில் கடலைப் போல இருக்கிருன். - அலைகடல்வாய் மீன்விசிறும் பேராச்ை வாரியன. குழந்தைக்குப் பால் கொடுக்காமல் இருக்கும் தாய்க்குப் பால் கட்டிக்கொண்டு வேதனை உண்டாகும். எப்படியாவது குழந்தையைப் பிடித்து வந்து பாலை ஊட்ட வேண்டும் என்று தவிப்பாள். ஆண்டவன் அப்படித் தவிக்கிறவன். "அவனே நாம் பாடுவோம்' என்று பெண்களோடு சேர்ந்து அம்மானை ஆடுகிருர் மணிவாசகர். பேராசை வாரியனைப் பாடுதுங்காண், அம்மாய்ை அம்மானே ஆடும் பெண்கள் ஒவ்வொரு பாட்டிலும் அம்மானை என்ருே அம்மாய்ை என்ருே சொல்லி முடிப்பது வழக்கம். அம்மாய்ை என்பதற்கு அம்மானே ஆடும் பெண்ணே என்று பொருள் கொள்ளலாம். பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலும் காண்டற்கு அரியான், எமக்கு எளிய பேர்ாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சுஏற்றி வாரா வழிஅருளி, வந்துஎன் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மாளுய்! * அம்மானே ஆடும் பெண்ணே, நிலவுலகில் உள்ள வர்கள், தேவலோகத்தில் உள்ளவர்கள், பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆராலும் தரிசனம் செய் வதற்கு அரியவன், அடியார்களாகிய எமக்கு எளியனுக உள்ள பெருமையை உடையவன், தென்னட்டைத் தன் நாடாக்கிக்கொண்டவன், திருப்பெருந்துறையில் கித்திய வாசம் செய்கிறவன், என்னைத் தன்பால் பித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/32&oldid=894883" இலிருந்து மீள்விக்கப்பட்டது