பக்கம்:திரு அம்மானை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்துப் பிடிக்கச் செய்தவன் 19 கொள்ளும்படி ஆக்கி, அதன்பயனக.இனி இந்த உலகத்தில் பிறந்து வாராத மார்க்கத்தை அருள் செய்து, இப்போது வந்து என் உள்ளத்தில் புகுந்தவன், தெவிட்டாக் அமுத மாய் இருப்பவன், அலைகின்ற கடலில் மீனுக்காக வலைவீசு பவனைப் போல அடியவர்களைத் தேடிச் செல்லும் பேராசை கடலைப் போலக் கொண்டவனகிய சிவபெரு மானைப் பாடுவோம்." புறத்தார் ஆகிய ஆராலும். எமக்கு என்றது மற்ற அடியார்களேயும் உளப்படுத்தியது; இறைவனல் ஆட் கொள்ளப் பெற்ற பெருமிதத்தால் பன்மையாகச் சொன்ன தாகவும் கொள்ளலாம். பேராளன்-பெரியவன், புகழை உடையவன். தென்னன்-தென்னட்டைத் தன் காற்றங் காலாகக் கொண்டவன்; பாண்டியனுக வந்தவன் என்றும் பொருள்கொள்ளலாம். வாராவழி-இந்த உலகத்தில் மீட்டும் பிறந்து வாராத நெறியை. உளம்புகுந்த வாரியன என்று கூட்டுக. அலைகடல்வாய் - அலகின்ற கடலினிடத்தே. மீன் விசிறும்.மீனுக்காக வலையை வீசும்; வலை என்ற சொல்லே வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும். பேராசையாகிய கடலே உடையவனே ஆசை கடல் போல எல்லேயிறந்ததாக இருக்கிறது. பாடுதும்-பாடு' வோம். காண்: அசை. - - பலருக்கு அரியனுக இருக்கும் இறைவன் அடியவர் களுக்கு எளியவகை வந்து அருள் செய்வான் என்பது கருத்து. - - திருவம்மானையில் இரண்டாம் பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/33&oldid=894886" இலிருந்து மீள்விக்கப்பட்டது