பக்கம்:திரு அம்மானை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிந்தன்யை உருக்குபவன் மேலே இருக்கிறவர்கள், செல்வம் கல்வி முதலிய வற்றில் பிறரை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தம்மை விடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடம் வந்து அவர்களோடு அளவளாவி அவர்களுக்கு உதவி புரிந்தால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆவார்கள். பொதுவாக உலகத் தில் உள்ளவர்கள் தம்மைவிட உயர்ந்தவர்களோடு நட்புப் பூணுவதையே விரும்புவார்கள். தங்களினும் தாழ்ந்தவர் களோடு கலப்பதில் அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. ஆனல் பண்பிலே சிறந்தவர்கள் தம்மினும் தாழ்ந்த வர்களைக் கண்டு மனம் இரங்கி அவர்களோடு பழகி அவர் களுடைய அல்லல்களைத் தீர்க்க முற்படுவார்கள். தனக்கு மேல் யாரும் இல்லாத இறைவன் கருணை மிகுதியினல் தன் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டிக் கீழே இறங்கி வருகிருன். அப்படி வருவதல்ை தன்னுடைய கிலே இழிந்து விடும் என்று கருதாமல் அவர்களுக்கு நலம் செய்யத் திரு. வுள்ளம் கொள்கிருன், - . இந்திரன் முதலிய பெரிய பதவி வகிக்கிறவர்களுக்கு இந்த இயல்பு இருப்பதில்லை. அவர்கள் வானத்தில் இருந்த படியே தம்முடைய பதவியில்ை செருக்குற்றுத் தம்மைவிட மேலான பதவி வகிப்பவர்களைப் பார்த்து, அந்தப் பதவி யைப் பெறவேண்டும் என்ற ஆவலுடன் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/34&oldid=894888" இலிருந்து மீள்விக்கப்பட்டது