பக்கம்:திரு அம்மானை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திரு அம்மானே வானத்தில் உலாவுகிற மேகம் தண்மை பெற்ருல் மழையாகி நிலவுலகில் இறங்குகிறது. இறைவனும் அப்படித்தான் இறங்கி வந்து கருணை பாலிக்கிருன். "வானமாய் நின்றின்ப மழையாய் இறங்கிஎன வாழ்விப்பது உன் பரங்காண்” என்று தாயுமானவர் பாடுகிருர். இங்கே இறங்கி வரும் சிவபெருமான் அடியார்களே ஆட்கொள்ளுகிருன். தகுதியை உடைய அன்பர்களுக்கு அவன் அருள் வழங்குகிருன். அவனுக்கு அன்பர்களின் தகுதியை எடை போடத் தெரியும். அவனுடைய திரு வருளுக்கு ஆளான பக்தர்கள் உயர்ந்தவர்கள். . . ஆல்ை அந்தப் பக்தர்கள் தம்மை அப்படி கினைப்ப தில்லை. தம்மை மிக இழிந்தவர்களாக எண்ணுவார்கள். தம் தகுதியை நோக்கி இறைவன் தம்மை ஆட்கொண்டான் என்று கருதுவதில்லை. "எம்முடைய தகுதியை நோக்கில்ை எமக்கு ஆண்டவன் அருள் கிடைக்க வாய்ப்பில்லே. என்ருலும் அவன் தன் அளவற்ற கருணையினல் எம் . முடைய தரத்திற்கும் மதிப்பளித்து ஆட்கொண்டான்' என்றே சொல்வார்கள். r சிவன் அவனி வந்தருளி எம் தரமும் ஆட்கொண்டு. அடியார்களின் கண் காணும்படி எழுந்தருளி வந்து அவன் கருணை பாலிக்கிருன். அவன் எப்படி இருக்கிருன்சீ திருற்ேறைப் பூசியிருக்கிருன். அவன் திருத்தோள்களில் திருநீறு பளிச்சென்று விளங்குகிறது. முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமல், அடக்கத்தோடு அன்பர்கள் தமக்கு அருள் வழங்கும் பெருமானுடைய திருக்கரங்களையும் தோளையும். பார்க்கிருர்கள். கொடை பெறும் ஏழை, வள்ளலுடைய கையையே பார்ப்பது போல, அன்பர்கள் அவன் திருப் புயங்களே நோக்குகிருர்கள். அவன் சிவபெருமான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/36&oldid=894892" இலிருந்து மீள்விக்கப்பட்டது