பக்கம்:திரு அம்மானை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையை உருக்குபவன் 33 பதைக் காட்டும் திருநீறு அங்கே தெரிகிறது. தன் தோள் - களில் நீற்றைப் பூசியவய்ை அவன் கோலம் காட்டுகிருன். எம்தரமும் ஆட்கொண்டு. தோட்கொண்ட நீற்றணுய், அந்தத் திருக்கோலம் காணக் காண அழகாக இருக் கிறது. சுத்த தத்துவத்தின் கிறம் வெண்மை. இறைவன் வெண்ணிறு சண்ணித்த திருத்தோள்கள் சத்துவத்தின் வடிவமாகவே விளங்குகின்றன. அந்தத் திருக்கோலத்தைக் கண்ணுரக் கண்ட அன் பர்கள் அதை உண்முகத்தே எண்ணி எண்ணிக் களிக் கிருர்கள். கண்முன்னே இனிய கனியைக் கண்டவர்கள் அதை உட்கொள்வது போல இந்தச் சிவப்பழத்தை அவர்கள் உட்கொள்கிரு.ர்கள்; சிந்தையிலே வைத்துக் கொள்கிருர் கள். கண்ணுக்கு எழில்தரும் புறக்காட்சிக்கு மேலே போய், உள் முகத்தே அவனே வைத்துத் தியானிக்கும்போது அவர் கள் உருகிப் போகிருர்கள். நம்முடைய கண்ணேக் கவர்ந்து உட்புகுந்து கருத்தையும் கவர் கிருனே! இந்தப் பரமோப காரத்துக்குரிய தகுதி நமக்கு இல்லாவிட்டாலும் இவன் அருளே வாரி வழங்குகிருனே' என்ற எண்ணம் மேலிட, அவர்கள் அந்தக் கருணேயை எண்ணி எண்ணி உருகு கிருர்கள். இறைவனே அப்படி உருக்குகிருன் என்று நினைக்கிருர்கள். - - - " உருகுவித்தால் யாரொருவர் உருகா தாரே' என்று அப்பர் பாடுவார். தோட்கொண்ட நீற்றய்ைச் சிந்தனையை வந்து உருக்கும். அந்தச் சிவபெருமான் எங்கே இருக்கிருன்? இந்த உலகத்துக்கு வந்து திருப்பெருந்துறை என்னும் தலத்தில் கித்திய வாசம் செய்கிருன். அந்தப் பெருந்துறை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/37&oldid=894894" இலிருந்து மீள்விக்கப்பட்டது