பக்கம்:திரு அம்மானை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திரு அம்மானே வாழும் இடமென்னும் சீரைப் பெற்றுவிட்டது. கப்பல் வந்து இறங்கும் துறையில் அதில் வந்த பண்டங்களைக் கொள்வதற்கு மக்கள் வந்து குழுமுவார்கள். அந்தத் துறை கப்பலுக்கு ஏற்றபடி பெரியதாக இருக்கும். பெரிய துறையில்தான் கப்பல் வரமுடியும். அப்படி ஒரு கப்பல் வந்து விட்டால் மக்கள், “பட்டினம் பெற்ற கலம்' என்று நாடி வந்து பண்டங்களைப் பெற்றுப் பயனடை வார்கள். . பெருந்துறை இறைவனென்னும் கப்பல் வந்து தங்கும் துறைமுகமாக விளங்குகிறது. அடியார் பலரும் புகுந்து கப்பலிலுள்ள பண்டங்களைப் பெற்று மகிழும் துறை அது. சிறிய துறைகளில் ஒடந்தான் வரும்; கப்பல் வராது. திருப்பெருந்துறை சிவபெருமாகிைய கப்பல் வந்து இறங் கும் பெரிய துறை; அதுவே அதற்குரிய சீர். - சிந்தனையை வந்து உருக்கும் . சீர்ஆர் பெருந்துறையான். - . இத்தகைய துறையில் வந்து அருளே வழங்கும் இறை வன் மணிவாசகரை ஆட்கொண்டான். அவரை ஆட் கொள்ள வேண்டுமென்று குதிரைச் சேவகனக வந்தான். வேதத்தையே குதிரையாக்கி அதன்மேல் இவர்ந்து வந்தான், மணிவாசகப் பெருமான் தமக்காக இறைவன் பரிமேற் கொண்டு வந்ததை எண்ணுகிரு.ர். அவன் வந்து காட்சி தந்ததல்ை அவருடைய பாசக்கட்டு விட்டது. பாண்டியன் அவரை விடுதலைசெய்தது பெரிதன்று. அவன் இந்த உடம்பி லுள்ள உறுப்புக்களுக்குத்தான் விலங்கு போட்டான். குதிரைகள் வந்தவுடன் அவரை விடுதலை செய்தான். அது பெரிய காரியம் அன்று. . உயிர்கள் எப்போதும் பாசம் என்னும் தனப்பட்டுக் கிடக்கின்றன. விலங்கிடப்பட்ட குற்றவாளிகளே இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/38&oldid=894896" இலிருந்து மீள்விக்கப்பட்டது