பக்கம்:திரு அம்மானை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையை உருக்குபவன் 35 சிறையிலிருந்து மாற்றி வேறு சிறைகளுக்குக் கொண்டு போவது போலப் பாசத்தளையில் பட்ட ஆன்மாக்களை வெவ்வேறு பிறவி எடுக்கச் செய்கிருன் இறைவன். இரு வினேகளாகிய குற்றம் நீங்கினவர்களின் விலங்கைத் தறித்து விடுதலை செய்கிருன். - 'ஏழையின் இரட்டைவினை ஆயதொர் உடற்சிறை இராமல் விடுவித்தருள் நியாயக் காரனும்.” என்பது அருணகிரியார் திருவாக்கு. இறைவன் குதிரையின் மேற்கொண்டு வந்து மணி வாசகருடைய கட்டு நீங்கும்படி அருள் செய்தான். பந்தம் பரியப் பரிமேற் கொண்டான். பந்தத்தை நீக்கிய பிறகு அவன் ஆனந்தத்தை வழங் கின்ை. அந்த ஆனந்தம் முடிவின்றி இருப்பது. உலகியற் சுகங்கள் முடிவை உடையவை. என்றும் பொன்ருத ஆனந்தம் சிவானந்தம். அந்தச் சிவானந்தத்தை இந்த உலகத் திலேயே பெறும் வண்ணம் இறைவன் அருள் புரிவான். அப்படிப் பெற்றவர்களே ஜீவன் முக்தர்கள் என்று சொல் வார்கள். நாம், இவ்வுலகத்திலிருந்து விடுபட்டு மேலே போய் முத்தியுலகத்தில் ஆனந்தம் பெறவேண்டும் என்று கினேக்கிருேம். ஆனல் இறைவன் தானே இங்கே எழுந் தருளி வந்து அன்பர்களுக்குப் பேரானந்தப் பெருவாழ்வை வழங்குகிருன். நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும் குழந்தைக்கு அன்னை உணவை எடுத்துச் சென்று ஊட்டுவதைப் போல ஆனந்தத்தை ஊட்டுகிருன்; அந்த மிலா ஆனந்தத்தை வழங்குகிருன். - இந்த உலகத்தில் நாம் அடையும் சுகத்துக்கு எல்லை யுண்டு. உலக சம்பந்தமான எதற்குமே ஒரு முடிவுண்டு. ஆனல் இறைவன் வழங்கும் ஆனந்தம் இங்கே கிடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/39&oldid=894899" இலிருந்து மீள்விக்கப்பட்டது