பக்கம்:திரு அம்மானை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திரு அம்மானே தாலும் அது அழிவடையாது; அந்தமிலா ஆனந்தமாக, இருக்கும். சேற்றிலே விழும் உணவோ, உடையோ மாசு. பட்டு விடும். ஆனல் மாணிக்கம் விழுந்தால் அது மாசடைவ தில்லை. குப்பையில் கிடந்தாலும் மாணிக்கம் மாணிக்கக் தானே? அவ்வாறு இந்த உலகத்தில் இந்த உடம்பில் இருக்கும் போதே பெறும் ஜீவன் முக்தியாகிய ஆனந்தம், உலகம் என்னும் சூழ்நிலையிலுைம், உடம்பில் இருக்கும்போது வழங்குவதாலும் மலினம் அடைவதில்லை; இறுதியைப் பெறுவதில்லை; அந்தமிலா ஆனந்தமாகவே இருக்கும். பரிமேற்கொண்டான் தந்த ,” அந்தமிலா ஆனந்தம். - இறைவன் வழங்கிய ஆனந்தம் அது. அதை கினைக்கும். போது அவனுடைய கருணப் பெருக்கை வியக்கத்தோன்று கிறது. இந்திரன் முதலியவர்கள் இந்த உலகத்தை அலட்சியமாகப் பார்த்து, வானகத்தில் கிற்கிருர்கள்; ஏதோ உயர்கிலேயில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிருர்கள். பாவம் அவர்கள் ஏமாந்து போனவர்கள். இந்த, உலகத்திற்கு இறைவன் எழுந்தருளி வந்து மெய்யடியார் களுக்கு அந்தமிலா ஆனந்தத்தை அருளும் ஏற்றத்தை அவர்கள் அறியார்கள். "அவர்கள் அந்தரத்திலே கிற்கட்டும். நாம் இறைவனருளால் பெற்ற ஆனந்தத்தைப் பாராட்டிப் பாடி அம்மானே ஆடுவோம்' என்றுமணிவாசக. நாயகியார் பாடுகிரு.ர். - இந்திரனும் மால்அயனும் ஏனேரும் வானேரும் அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி எம்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட கீற்றணுய்ச் சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த - அந்தம்இலா ஆனந்தம் பாடுதும்காண், அம்மாளுய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/40&oldid=894902" இலிருந்து மீள்விக்கப்பட்டது