பக்கம்:திரு அம்மானை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையை உருக்குபவன் 27°

  • அம்மானே ஆடும் பெண்ணே, இந்திரனும் திருமாலும் அயனும் மற்றப் பெரிய பதவியில் உள்ள குபேரன் முதலியவர்களும் அவர்கள் அல்லாத தேவர்களும் வானுலகத்திலிருந்து இறங்கி வராமல் அங்கேயே தம் பதவிக்ளே இறுகப்பிடித்துக் கொண்டு கிற்க, சிவபெருமான் இந்த நிலவுலகத்துக்கு எழுந்தருளி வந்து; ஒன்றுக்கும் பற்ருத எங்கள் சிறிய தகுதிக்கும் மதிப்புத் தந்து ஆளாகக் கொண்டான்; திருத்தோளில் திருநீற்றை அணிந்து கொண்ட கோலமுடையவனய், எம்முடைய உள்ளத்திலே புகுந்து உருக்குகின்றவனும், சிறப்பையுடைய திருப்பெருக் துறையில் நித்தியவாசம் செய்கிறவனும், என் பாசக் கட்டானது நீங்கும்படி குதிரையின்மேல் இவர்ந்து வந்த வனுமாகிய இறைவன் எமக்கு வழங்கிய இறுதியற்ற சிவானந்தத்தைப் பாராட்டிப் பாடுவேரம்." - -

(மாலும் அயனும் என்று உம்மையை மாலுக்கும் கூட்டுக. ஏைேர் என்றது, தேவலோகத்தில் இந்திரனப் போன்ற பதவிகளில் இருப்பவர்களே. வானேர் என்றது. மற்றத் தேவர்களே. அந்தரம்-வானுலகம். கிற்கதேவலோகத்தினும் இழிந்தது என்ற எண்ணத்தில்ை இங்கே வரக் கூசி கிற்க. அவர்கள் அந்தரத்தில் , கிற்கிருர்கள். யாம் இங்கே இருந்தபடியே நலம் பெற்ருேம்' என்கிருர். எம் தரமும்-எம்முடைய சிறியதகுதிக்கும்; தரம் என்றது தம்முடையது தாழ்வான தகுதி என்று எண்ணிய படி. தரமும்: உம்மை, இழிவுசிறப்பு. தோள்.புயம், கை இரண்டையும் குறித்தது. சிந்தன.உள்ளம்; “சிந்தனை கின்றனக்காக்கி" என்பது மணிவாசகர் பிறிதோரிடத்தில் சொல்வது. அவனியில் இறங்கி வந்தருளியதோடு யாம் இருக்கும் இடத்தையும் தேடிவந்தான் என்பதைக்குறிக்க, "அவனி வந்தருளி, வந்து உருக்கும்' என்று இருமுறை வருகையைச் சொன்னர். பந்தம்-பாசக்கட்டு. பரிய-நீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/41&oldid=894904" இலிருந்து மீள்விக்கப்பட்டது