பக்கம்:திரு அம்மானை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை வெள்ளம் - 39 மாணிக்கவாசகர் சொல்கிரு.ர். - 'என் மனம் கல்போல இருக்கிறது. சுற்றிச் சூழ உள்ள ஜீவர்களின் துன்பத்தைக் கண்டு நெகிழவில்லை. சிவபெருமான் கருணைக்காக ஏங்கி உருகவில்லை. மனத் தில்ை மனிதன் நல்லவனும் பொல்லாதவனும் ஆகிருன். கானே நல்ல மனம் படைக்கவில்லை. கனிவு என் மனத்தில் இல்லை. என் மனம் காயாக, வெம்பியதாக இருக்கிறதே அன்றிப் பழுக்கவில்லை. பழுத்த மனம் உடையவர்களே இறைவன் ஆட்கொள்கிருன். அவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிருன்.' & "பழுத்தமனத்து அடியர் உடன் போயினர்’ என்று வேருே.ரிடத்தில் மணிவாசகர் பாடுகிருர். . “கல்லாகிய மனத்தைப் பெற்ற யான் எல்லாரினும் கடைப்பட்டவகை இருக்கிறேன். அடியார்களின் கூட்டத்தில் சேராமல் எங்கெங்கோ அலைகிறேன். அடியார்கள் இழித்து ஒதுக்கிய போகங்களையே அநுப விக்க எண்ணித் திரிந்து கொண்டிருககிறேன். ஊரவர் துக்கி எறிந்த எச்சிலை நக்கி உண்னும் நாயைப் போல இருக்கிறேன்.' - கல் ஆம் மனத்துக் கடைப்பட்ட நாயேன. 'இவ்வாறு அலேந்த என்னே இறைவன் ஆட்கொண் டான்' என்று சொல்ல வருகிருர், . . . . - அவன் சர்வ வல்லமை உள்ளவன்; அகடித கடன. சாமர்த்தியம் உள்ளவன்; பிறரால் செய்ய முடியாத செயல்களைச் செய்ய வல்லவன். அவனுடைய அருளைப் பெற்றவர்களே செயற்கரிய செய்யும் பெரியாராக இருக்கும்போது, அவனுடைய செயலைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? அவன் எல்லாம் செய்ய வல்ல சித்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/53&oldid=894930" இலிருந்து மீள்விக்கப்பட்டது