பக்கம்:திரு அம்மானை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. திரு அம்மானே வல்லாளன். அவன் எல்லாப் பிரபஞ்சத்துக்கும் தலைவகை. இருக் தாலும் அடியார்கள் அணுகிப் போற்றி வழிபடுவதற்காக வடிவம் கொண்டு கென்னட்டில் எழுந்தருளியிருக்கிருன். தென்னாட்டிலும் திருப்பெருந்துறையையே தன்னுடைய தலைநகராகக் கொண்டு கித்திய வாசம் செய்கிருன். அடியார்கள் தன்னைத் தேடி அலைந்து வருந்தாமல் அவர்கள் எளிதிலே கண்டு .ோற்றி வழிபடும்படி அங்கே எழுந்தருளி யிருக்கிருன். - தென்னன், பெருந்துறையான். அத்தகைய கருணேப் பிரான் மாணிக்க வாசகரை ஆட் கொண்டான். 'என்னேப் பித்துப் பிடிக்கச் செய்தான். தன்னேயன்றி வேறு எதனையும் நாடாமல், அணுகாம்ல் இருக்கும் சிவப்பித்து என் தலையில் மண்டிக் கொண்டது. அந்தப் பித்தை அவன் என்னிடத்தில் ஏற்றி விட்டான்' என்கிரு.ர். பிச்சு ஏற்றி. “அவன் மெய்யடியாரைத் தேடி அலைகிற பித்தன். என்னையும் தன்னே நாடித் தேடி கிற்கும் பித்தன் ஆக்கிவிட் டான். இந்தப் பித்து ஏறியவுடன் என் பழைய கிலே மாறியது. என் மனம் கல்லாக இருந்தது கனியாகிவிட்டது; நெகிழ்ச்சியும் சுவையும் உடையதாயிற்று. அன்பினுல் உருகும் நெகிழ்ச்சியும் அருளினல் சிவாதுபவம் பெறும் சுவையும் இதன்பால் உண்டாகிவிட்டது. பசுகரணம் பதி காரணம் ஆகிவிட்டது. கல்லேப் பிசைந்து கனியாக்கி விட்டான். கனிந்த பக்குவம் அடைந்த பிறகு மேலும் அவன் எனக்கு இன்பம் அருள முன்வந்தான். நான் இன்பம் எங்கே என்று தேடியலையாமல் தன்னுடைய கருணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/54&oldid=894932" இலிருந்து மீள்விக்கப்பட்டது