பக்கம்:திரு அம்மானை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை வெள்ளம் 41 வெள்ளத்திலே அழுத்திவிட்டான். வெள்ளத்திலே ஆழ்ந்த வனுக்குத் தன் உணர்வு இல்லாமல் போய்விடும். மூச்சு முட்டி உணர்வை இழ்ப்பான். அவ்வாறு நான் ஜீவ போதத்தை இழந்துவிட்டேன். அவனுடைய கருணை வெள்ளத்தினுள் அமிழ்ந்து வேறு எந்தப் பொருளையும் உணராமல், என்னேயே இழந்து அதன் மயமாக ஆகிவிட் டேன். அவ்வாறு என்னே அவன் தன் கருணை வெள்ளத்தில் அழுத்திவிட்டான்.” - - கல்லப் பிசைந்து கனி ஆக்கித் தன் கருணை வெள்ளத்து அழுத்தி, மனம் கல்லாக இருந்தால் கருணை வெள்ளத்தில் ஆழ்த்தினுலும் அது வேறுபட்டே கிடக்கும். சுற்றிச் குழக் கருணே பரவியிருந்தாலும் மனத்திலே அது ஊறுவதில்லை. கல்லை ஆயிரங்காலம் தண்ணிரிலே போட்டிருந்தாலும் அதில் சரம் பாய்வதில்லை. இதை நன்கறிந்த இறைவன் மனமாகிய கல்லப் பிசைந்து கனியாக்கித் தன் கருனே வெள்ளத்தில் அழுத்தின்ை. கட்டி தட்டி நின்ற மனம் இப்போது அந்தக் கருண வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து இல்லாமலே போய்விட்டது. . இறைவனுடைய பெருமைகளையும் திருவருளையும் இடைவிடாமல் கினைந்து உருகும் மனம் நாளடைவில் தன் செயல்களை இழந்து கடைசியில் இல்லாமலே போய்விடும். சர்க்கரைப் பொம்மையால் கடலின் ஆழத்தை அளவிட எண்ணி அதை அதற்குள் விட்டால் அது அளப்பது போலக் கீழே செல்லும். செல்லச் செல்ல அது கரைந்து கொண்டேவரும்.கடைசியில் அது இல்லாமலே போய்விடும். மனேவிருத்திகளே இல்லாமல் செய்வதற்கு இறைவனுடைய திருவுருவத்தியானமும் அவன் இயல்புகளே கினேந்து உருகு வதும் ஏற்ற வழிகள். சர்க்கரைப் பொம்மையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/55&oldid=894934" இலிருந்து மீள்விக்கப்பட்டது