பக்கம்:திரு அம்மானை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 திரு அம்மானே உவமையை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியிருக் கிருர். ஒரு நாயைத் தெள்ளுப்பூச்சிகள் மொய்த்துத் தொல்லப்படுத்தின. அது ஒரு குச்சியை வாயில் கவ்விக் கொண்டு ஒரு குளத்தில் இறங்கியது. முழங்கால் ஆழம் வரைக்கும் சென்றது. கால்களிலிருந்த பூச்சிகள் உடம்பிலே ஏறிவிட்டன. பிறகு கழுத்தளவு நீருக்குள் சென்றது. பூச்சிகள் யாவும் தலையில் போய் அமர்ந்து கொண்டன. பிறகு அந்த காய் முகத்தில் பாதி மறையும்படி மூழ்கியது. தெள்ளுப்பூச்சிகள் அதன் வாயில் இருந்த குச்சியில் மொய்த்துக் கொண்டன. பிறகு அந்த காய் அந்தக் குச்சியை நீரில் விட்டுவிட்டது. தெள்ளுப் பூச்சிகளின் தொல்லை. யினின்று அது விடுதலே பெற்றது. மனத்தில் எத்தனையோ பூச்சிகள் இருக்கின்றன. காமம், குரோதம் முதலய அவகுணங்கள் அதில் மொயத்துக் கொண்டிருக்கின்றன. இறைவனுடைய கருணைக்கு ஆளாகி மெல்ல மெல்லப் பக்குவம் ஏறி வரும்போது அந்தக் குணங்கள் ஒழியத் தொடங்கும். இறைவனுடைய கருனே வெள்ளத்தில் ஆழ்ந்துவிட்டால் வினேகள் யாவும் ஒழிந்து விடும். அவ்வாறு இறைவன் மணிவாசகரைத் தன் கருணே வெள்ளத்தில் ஆழ்த்தி முன்பு மொய்த்திருந்த வினைகளே யெல்லாம் போகும்படி செய்து விட்டாம்ை, தன் கருணை வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியன. - - இறைவன் வேதத்தை அருளியவன்; வேதத்தை, எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவன்; வேதத்தின் பொருளாக இருப்பவன். அதல்ை அவனே, - வேதியா வேத கீதா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/56&oldid=894936" இலிருந்து மீள்விக்கப்பட்டது