பக்கம்:திரு அம்மானை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை வெள்ளம் 43: என்று அருளாளர்கள் பாடுவார்கள். ஆகவே விண்கடிந்த வேதியன என்ருர். அந்தண உருவம் கொண்டு தம்மை ஆட்கொண்டதை எண்ணியும் அவ்வாறு சொன்னர். திருப்பெருந்துறையில் சிவபெருமான் மாணிக்க வாசகரை ஆட்கொண்டான். அவரை ஆட்கொண்ட துறை அது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரிடத்தில் அநுக்கிரகம் கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொருவர் குடும்ப வைத்தியராக இருப்பார். அவ்வாறு திருப்பெருந் துறையில் எழுந்தருளிய பிறவிப் பிணி மருத்துவகிைய இறைவன் அவ்விடத்துக்கு வந்த மணிவாசகரை ஆட்கொண்டான். - - எல்லாரும் சென்று உடம்பைக் காட்டி மருந்து பெற்றுச் சிகிச்சை பெறும் பொதுமருத்துவமனைகளும் நாட்டில் இருக்கின்றன. அதுபோலப் பொதுவான தலம் ஒன்று இருக்கிறது; அதற்குப் பொது என்றே பெயர் அமைந்திருக்கிறது. • . - "பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்” என்று கீர்த்தித் திருவகவலில் வருகிறது. அதற்குச் சிற்றம் பலம் என்று பெயர். பொது கடத்தரசாகிய புண்ணியன் அங்கே யாவரும் காண நிலைபெற்று கின்று ஆடுகிருன். அது தில்லை என்னும் திருத்தலத்தில் இருக்கிறது. அங்கே அவன் புகுந்து சிற்றம்பலத்தில் மன்னுகிருன். அங்கே அவன் மன்னுவத்ால் யாவரும் கண்டு தரிசித்துப் பேறு பெற. எளிதாக இருக்கிறது. “மன்னுக தில்லை, வளர்கநம் பத்தர்கள்' என்று அதன் பெருமையை நினைந்து அருளாளர்கள். வாழ்த்துவார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/57&oldid=894939" இலிருந்து மீள்விக்கப்பட்டது