பக்கம்:திரு அம்மானை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 திரு அம்மானே தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும், அவன் சிற்றம்பலத்தில் கிலேயாக வாசம் செய்தாலும் அடியார்கள் அழைத்தால் அவர்களுக்கு அருள் செய்ய அங்கே எழுந்தருள்வான். கடுமையான நோயாளிகளே அவர்கள் வீட்டுக்கே சென்று பார்க்கும் மருத்துவரைப் போல அவன் அடியார்களே நாடி வருவான். டாக்டர்கள் கார் வைத்திருக்கிருர்கள். உல்லாசப் பயணத்துக்காக அன்று; நோயாளிகள் உள்ள இடத்துக்கு விரைந்து சென்று கவனிப்பதற்காக வேகமாகச் செல்லும் வாகனத்தை வைத்திருப்பார்கள். இறைவனும் விடை யென்னும் வாகனத்தை வைத்திருக்கிருன். அடியார்கள் உள்ள இடத்துக்குச் சென்று அருள் பாலிப்பவன் என்பதையே அந்த வாகனம் உணர்த்துகிறது. இறைவனுடைய திருவுருவம், அவனுடைய அங்கங்கள், உபாங்கங்கள், பிரத்தியங்கங்கள் யாவையுமே சில கருத்துக்களேக் குறிப்பன. நுண்பொருளைப் பருப் பொருளாகக் காட்டினுல்தான் விளங்குமென்று இறைவன் அவற்றைக் கொண்டிருக்கிருன். அவன் விடையூர்தியை .உடையவனுக இருப்பது, கருணேயில்ை அடியார் வேண்டு மிடம் செல்லும் கருணேயாளன் என்பதைக் காட்டுவது. அவனுடைய இடபவாகனம் மந்தமாக நடப்பது அன்று; வேகமாக நடப்பது; இறைவனுடைய கருணையின் வேகத்துக்குத் துணை செய்வது. ஒல்லை விடையான. "அத்தகைய பெருமானப் பாடுவோம்" என்று கிறைவு செய்கிருர் மணிவாசகர். - ஒல்லை விடையானப் பாடுதும்காண் அம்மாளுய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/58&oldid=894941" இலிருந்து மீள்விக்கப்பட்டது