பக்கம்:திரு அம்மானை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை வெள்ளம் . 4莓 தமக்கு அருள் செய்த பெருங்கருணையைப் பாராட்டி, மற்றவர்களும் மெய்யன் புடையவர்களானல் வந்து கண்டு கலம் பெறும்படி பொதுவான சிற்றம்பலத்தில் மன்னு: கின்ருன் என்றும், அன்பு முறுகி நின்ருல் அவர்கள் உள்ள இடத்துக்கே சென்று அருள் வழங்குவான் என்றும் அறி விக்கும் வகையில் இந்தத் திருப்பாசுரத்தைப் பாடுகிருர்: மணிவாசகப் பெருமான். கல்ஆம் மனத்துக் கடைப்பட்ட நாயேன வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சுஏற்றிக் கல்லைப் பிசைந்து கனி ஆக்கித் தன்கருணை வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் ஒல்லை விடையானப் பாடுதும்காண் அம்மாளுய்

  • அம்மானே ஆடும் பெண்ணே, கல் ஆக நெகிழ்ச்சி' யின்றியுள்ள மனத்தினால் இழிந்து, அன்பருடன் சேர முடியாமல் கடை கிலத்தில் உள்ள, நாய் போலத் தூய்மை யின்றிக் கிடந்த அடியேனே, எல்லாம் வல்ல பிரானும் தென்னுட்டைத் தனக்குரிய நிலமாகக் கொண்டு திருப் பெருந்துறையில் கித்திய வாசம் செய்பவனுமாகிய, எனக்குச் சிவப்பித்தை உண்டாக்கி, மனமென்னும் கல்லைப் பிசைந்து கெகிழ்ச்சியும் சுவையும் உடைய க்னி" யைப் போல ஆக்கி, தன்னுடைய கருணையாகிய வெள்ளத் தில் அழுத்தி எல்லாவற்றையும் மறக்கச்செய்து, பிறவிக்குக் காரணமாகிய வினைகளை யெல்லாம் அழித்த அந்த அகாதி" அந்தணனை, யாவரும் தன்னைத் தரிசனம் செய்து பேறு. பெறும் பொருட்டுத் தில்லையம்பதியிலே எழுந்தருளித் திருச்சிற்றம் பலமாகிய பொதுவில் தங்கியுள்ளவனும், அடியார் உள்ள இடபத்துக்குப் போவதற்கு வேகமாகச் செல்லும் இடபவாகனத்தை உடையவனுமாகிய சிவபெரு. மானைப் பாடுவோம்." -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/59&oldid=894943" இலிருந்து மீள்விக்கப்பட்டது