பக்கம்:திரு அம்மானை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திரு அம்மானே சத்துவத்தின் அடையாளம் வெண்மை. அந்தச் குழல் சத்துவகுணம் நிரம்பியது என்பதை அந்த வெண்ணிறமே காட்டும். - கேட்டாயோ தோழி. கிறிசெய்தவாறு. ஒருவன்? தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான். அவள்: * அந்தப் பெருந்துறை பாண்டி காட்டில் உள்ளது. தென்னகிைய பாண்டியனது அரசாட்சியில் இருப்பது அது. அந்தத் திருத்தலத்தை அடிக்கடி அவன் தரிசிக்கலாம். அத்தகைய பேறு அவனுக்குக் கிடைத் திருக்கிறது. சிவபெருமான் எனக்குச் செய்த திருவருளே எண்ணிப் பார்க்கையில், வியப்பாக இருக்கிறது. ஏதோ மாயவித்தை செய்தது போலத் தோன்றுகிறது. t தோழி: என்ன மாயம் . அவள்: நான் எப்படி இருந்தேன்! ஒன்றுக்கும் பற்ருதவளாகிய நான் எந்த விதத் தகுதியும் இல்லாதவ: ளாக, அறியாமை மிக்கவளாக இருந்தேன். அத்தகைய என்னிடம் மாயம் செய்தான். தோழி: என்ன மாயம் ஏமாற்றிவிட்டான அவள் என்னே ஏமாற்றவில்லை. என்னேயே மாற்றி விட்டான்; நான் பெருத அநுபவங்களைப் பெறச் செய்து விட்டான். - - - தோழி: சற்றே விளக்கமாகச் சொல். அவள்: நான் பெருந்துறை சென்றேன். அங்கே அவன் எழுந்தருளி என்ன ஆட்கொண்டான். இதுவரையில் வேறு யாரும் எனக்குக் காட்டாதவற்றை யெல்லாம். காட்டினன். இதுவரையில் கண் இருந்தும் குருடியைப் போல இருந்த எனக்கு ஞானக் கண்ணேத் திறக்கப்பண்ணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/62&oldid=894951" இலிருந்து மீள்விக்கப்பட்டது