பக்கம்:திரு அம்மானை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணத்தேன் 49 இதுகாறும் காதை அற்புதக் காட்சிகளைக் காணச் செய்தான். - காட்டாதன எல்லாம் காட்டி தோழி : என்ன என்ன காட்டினன்? அவள் அவன் அருளப் பெறுவதற்கு முன் இந்த உலகத்தை நான் பார்த்த பார்வையே வேறு பேதபுத்தி யால் பார்த்தபடியால் எல்லாம் வெவ்வேருக, நாணு வித மாகத் தோற்றின. தோழி : இப்போது என்ன ஆயிற்று? அவள் : எல்லாம் அவன் மயமாகத் தோற்றுகின்றன. அவன் சிவத்தையே காட்டிவிட்டான். மங்களமும் கருணையும் கிறைந்த சிவத்தைத் தரிசித்தேன். அவனே அந்தச் சிவந்தான். அவன் தன்னேயே உள்ளவாறு காட்டினன். அந்தக் காட்சியினல் மெய்யுணர்வு பெற்ற யான் ஒரே வியப்பில் மூழ்கினேன். . தோழி: பிறகு: அவள் : அவனுடைய வடிவத்தைக் கண்டு மயங்கி கிற்கையில் கான் பற்றிக் கொள்ளும்படி தன்னுடைய திருவடித் தாமரைகளைக் காட்டினன். - - தாள் தாமரை காட்டி. * தோழி : அவன் தாளேக் கண்டதல்ை உனக்கு என்ன கிடைத்தது? . அவள் : அவனுடைய திருத்தாளே இன்ப வடிவானது, அதுவே மோட்சம் என்பது. அது தாமரை போல ஒளிர்ந்து தேன். பில்கியது. - தோழி : தேனு? 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/63&oldid=894953" இலிருந்து மீள்விக்கப்பட்டது