பக்கம்:திரு அம்மானை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. திரு அம்மானை அவள்: ஆம்; அதில் கருணை யென்னும் தேன் பொங்கியது. அதை நான் பெற்று நுகர்ந்தேன். அந்தத் தேனே உண்டதல்ை என்னுடைய கிலேயே மாறிவிட்டது. தன் கருணைத் தேன் காட்டி. தோழி : எவ்வாறு மாறியது? அவள் : வண்டு தேனேக் குடித்து மயங்கிக் கிடப்பது போல நான் ஆகிவிட்டேன். இயல்பாக நான் செய்யும் செயல்களெல்லாம் வேறுபட்டன. உலகத்துப் பொருள் களைக் கண்டு, இவையே நமக்கு இன்பம் தருவன என்று இருந்த நிலை மாறிவிட்டது. விளையாட்டுப் பொருள்களைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியோடு முன்பெல்லாம் ஈடுபடு வேன்! இப்போது அவற்றிலே மனம் செல்லவில்லை. உணவு, உடை, அணிகலன் இவற்றில் எவ்வளவு விருப்பம் வைத்திருந்தேன்! அவை யாவும் அவனுடைய கருணத் தேனுக்கு முன்னல் பொருளற்றுவிட்டன. அந்தத் தேனே உண்ட மயக்கத்தால் பித்துப்பிடித்தவனைப் போல ஆகி விட்டேன். அவனையும் அவன் கருணத் தேனை வழங்கிய தையும் எண்ணி எண்ணிப் பூரிக்கிறேன். மகிழ்ச்சியில்ை புன்முறுவல் பூக்கிறேன். நகை செய்வதற்குக் காரணம் யாது இல்லாமல் இருக்க, கானகச் சிரிப்பதைக் கண்டு, என்னைப் பார்த்தவர்கள் என்னேக் கண்டு சிரிக்கிருர்கள். என்னைப் பித்தி என்று சொல்லி நாட்டில் உள்ளவர்கள் நகை செய்கிருர்கள். s காட்டார் நகை செய்ய, தோழி : அப்படிப் பலரும் உன்னைப் பார்த்து கை செய்யும்படி நீ இருப்பானேன்? அதனால் உனக்கு என் லாபம்? . r.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/64&oldid=894955" இலிருந்து மீள்விக்கப்பட்டது