பக்கம்:திரு அம்மானை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைத்தேன் 51 அவள் : முன்பெல்லாம், இறைவன் திருவருளுக்கு ஆட் பட்டவர்கள் இருக்கும் கிலேயைக் கண்டு நானே சிரித்த துண்டு. அவர்களுடைய புறக் கோலத்தையும், தம் உடம் பைக் கவனியாமல் இருப்பதையும், எல்லாப் பெண்களையும் போல உலகியலில் ஈடுபட்டு ஒடியாடி விளையாடாமல் இருப்பதையும், எப்போதும் எதையோ நினைத்துக் கொண்டு மகிழ்வதையும் கண்டு நானே பரிகசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதன் உண்மை தெரிகிறது. இந்த உலக சுகம் பெரிதென்ற நிலை மாறி வேருெரு பெரிய இன்பத்தைக் கண்டவர்கள் அவர்கள் என்ற உண்மை புலகிைறது. தோழி: என்ன இன்பம் அது? அவள் இந்த உலகத்தை நாம் வாழும் இடமாகவும் இந்த ஊரை நம் சொந்த ஊராகவும் இந்த வீட்டை நமக்கே உரிய வீடாகவும் எண்ணி இதுகாறும் ஏமாந்திருந்தேன்; உண்மையை உணராமல் மயங்கி யிருந்தேன். * - தோழி: இப்போதும் தேனுண்ட மயக்கத்தில்தானே இருக்கிருய்? - அவள்: இந்த மயக்கம் வேறு; அந்த மயக்கம் வேறு. அந்த மயக்கம் உண்மையல்லாதவற்றை உண்மை என்று கருதிய மயக்கம்; 'பொருள் அல்லவற்றைப் பொருளாக் கருதும், மருள். அதல்ைதான் பிறவித்துன்பத்தை அடை கிருேம். இந்த வீடு, வீடு அன்று. உயிர்குடியிருக்கும் இந்த உடம்பே கிலேயான இல்லம் அன்று. அப்படியிருக்க நாம் குடியிருக்கும் இந்தக் கட்டிடம் கிலேயாகுமா? இவையெல் லாம் உண்மை அறியாத மயக்கத்தால் பற்றியிருக்கும் இடங்கள். இவை கீழானவை. ஆல்ை உண்மையான வீடு இன்னது என்பதை நான் இப்போது உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/65&oldid=894957" இலிருந்து மீள்விக்கப்பட்டது